கிருமித்தொற்று புதிய உச்சம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஒரே நாளில் 412,000 பேருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது. கிரு­மித்தொற்­றின் 2வது அலை சுனாமி அலை போல இந்­தி­யாவைத் தாக்கி வரு­கிறது.

கடந்த சில நாட்­க­ளாக கொரோ­னா­வின் பாதிப்பு சற்று குறை­வாக பதி­வாகி இருந்­தது.

இந்த நிலை­யில் இது­வரை இல்­லாத அள­வாக ஒரே­ நா­ளில் புதி­தாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்று தினத்­தந்தி வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

கடந்த 24 மணி­நே­ரத்­தில் 412,262 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இத­னால் மொத்த கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை 2 கோடியே 10 லட்­சத்து 77 ஆயி­ரத்து 410ஆக (21 மில்­லி­யன்) அதிகரித்து உள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் புத­னன்று 3,980 பேர் உயி­ரி­ழந்து உள்­ள­னர். இத­னால் மொத்த உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்து உள்­ளது.

கடந்த 24 மணி ­நே­ரத்­தில் 329,113 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள 35,66,398 பேர் தற்­போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

நாட்­டில் இது­வரை போடப்­பட்ட கொரோனா தடுப்­பூ­சி­க­ளின் எண்­ணிக்கை 16 கோடியே 25 லட்­சத்து 13 ஆயி­ரத்து 339ஆக உள்­ளது என தெரி­விக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரி­சோ­த­னை­யும் தொடர்ந்து முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. இது­வரை 29 கோடியே 67 லட்­சத்து 75 ஆயி­ரத்து 209 கொரோனா பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ளன என்று ஐசி­எம்­ஆர் எனும் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!