தொற்று சிகிச்சை மையத்தில் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்ற கையோடு மு.க. ஸ்டாலின் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி பராமரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இந்த மையத்தில் முதல் கட்ட மாக 300 படுக்கைகளும் அடுத்த கட்டமாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்படுக்கைகளுக்கு உயிர்வாயு வசதிகளை ஏற்படுத்துவதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட உயிர்வாயு சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கைகள் 10ஆம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ராஜீவ் காந்தி அரசாங்க மருத்­துவமனை­யில் இருந்­தும் அரசு ஓமந்­தூ­ரார் அரசாங்க மருத்­து­வ­ ம­னை­யில் இருந்­தும் இம்­மை­யத்­திற்­கான மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் பணிய மர்த்­தப்­ப­டு­வர்.

இந்த மையத்திற்கான உணவு, பரா­ம­ரிப்பு பணி­களை பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மேற்­கொள்­ளும் என்று தினத்­தந்தி வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக் கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தபோது நகர்­புற வளர்ச்சித்­ துறை அமைச்­சர் கே.என்.நேரு, ஊர­கத் ­தொ­ழில் துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன், வணி­க ­வ­ரித் துறை ஆணை­யர்-முதன்­மைச் செய­லா­ளர் மற்­றும் பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் 'கொவிட்-19' கண்­கா­ணிப்பு அலு­வ­லர் எம்.ஏ.சித்­திக், ஆணை­யர் கோ.பிர­காஷ் மற்­றும் அரசு அதிகாரிகள் உட­னி­ருந்­த­னர் என்று அரசு வெளியிட்ட செய்­திக்­கு­றிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!