செய்திக்கொத்து

ஸ்டாலின்-பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, கிருமிப் பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மகாராஷ்டிரா, இமாசலப்பிரதேசம், மத்திய பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

'இம்­மா­தம் 15ஆம் ேததிக்­குள்

12,500 உயிர்வாயு படுக்கை வசதி'

சென்னை: ெசன்னை ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை­யில் ஆய்வு செய்த சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், தமி­ழ­கத்­தில் வரு­கிற 15ஆம் தேதிக்­குள் 12,500 உயிர்வாயு படுக்கை வசதி அமைக்­கப்­படும் என்று தெரி­வித்­துள்­ளார்.

"சிகிச்சை முறை­கள் குறித்து நோயா­ளி­க­ளி­டம் கேட்டு­அறிந்தேன். கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ ப­டுத்தி உள்­ளோம். ரெம்­டெ­சி­வர் மருந்து தட்­டுப்­பாடு இன்றி கிடைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை­யில் கூடு­த­லாக 500 ஆக்­சி­ஜன் படுக்­கை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்­டங்­களில் ரெம்­டெ­சி­வர் விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது," என்று அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

தனது பதவி மாற்றத்துக்கு தானே

கையெழுத்திட்ட ராஜீவ் ரஞ்சன்

சென்னை: தமி­ழ­கத்­தின் புதிய தலைமை செய­லா­ள­ராக வெ. இறை­யன்பு நிய­மிக்­கப்­பட்­ட­தால் அப்­பொ­றுப்­பில் இருந்த ராஜீவ் ரஞ்­சன் தனது பதவி மாற்­றத்­திற்­கான உத்­த­ர­வில் தானே கையெ­ழுத்­திட்­டுக் கொண்­டார்.

அரசு விதி­மு­றைப்­படி ஐஏ­எஸ் அதி­கா­ரி­களை தலைமை செய­லா­ளர்­தான் மாற்ற முடி­யும். எனவே புதிய தலைமை செய­லா­ள­ருக்­கான உத்­த­ர­வில் ராஜீவ் ரஞ்­சன் கையெ­ழுத்­திட்­டார். தமி­ழ­கத்­தின் தலைமை செய­லா­ள­ராக இருந்த ராஜீவ் ரஞ்­சன், தமிழ்­நாடு செய்­தித்­தாள் கழ­கத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளார். இதற்­கான பணி நிய­மன உத்­த­ர­வில் விதி­மு­றை­க­ளின்­படி அவரே கையெ­ழுத்திட்­டுள்­ளார்.

அவ­ரது பெய­ரில்­தான் அவ­ரது பணி நிய­ம­னத்­திற்­கான உத்­த­ர­வும் வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மே 11 சட்டமன்றம் கூடுகிறது

சென்னை: தமி­ழக சட்­ட­மன்­றத்­தின் முதல் கூட்­டத்­தொ­டர் 11ஆம் தேதி சென்னை கலை­வா­ணர் அரங்­கத்­தில் நடை­பெ­றும் என சட்­டப்­பே­ரவை செய­லர் சீனி­வா­சன் நேற்று அறி­வித்­துள்­ளார். "அன்­றைய தினம் தேர்­த­லில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்­பி­னர்­கள் பேர­வை­யில் பத­வி­யேற்­றுக் கொள்­கின்­ற­னர். தேர்­தல் வெற்றி சான்­றி­தழை தவ­றா­மல் உறுப்­பி­னர்­கள் கொண்­டு­வர வேண்­டும். சபாநா­ய­கர், துணை சபா­நா­ய­கர் தேர்வு 12ஆம் தேதி காலை 10 மணிக்கு நடை­பெ­றும்," என்றும் சீனி­வா­சன் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!