‘ட்ரோன்’ மூலம் தடுப்பூசி

புது­டெல்லி: கண்­ணுக்கு எட்­டாத உய­ரத்­தில் பறந்து செல்­லக்­கூ­டிய ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) மூலம் தடுப்­பூ­சி­களை விநி­யோ­கிக்­கும் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள தெலுங்­கானா அர­சுக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

தடுப்­பூ­சி­க­ளின் விநி­யோ­கத்­துக்கு பார்­வை­யில் படக்­கூ­டிய தொலை­விற்கு அப்­பால் செல்­லும் ட்ரோன்­க­ளைப் பயன்­ப­டுத்தி பரிசோ­தனை மேற்­கொள்­வ­தற்கு தெலுங்­கானா அர­சுக்கு நிபந்­த­னை­யுன் கூடிய விலக்கை விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­கம் மற்­றும் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை இயக்­கு­ந­ர­கம் ஆகி­யவை வழங்­கி­யுள்­ளன.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் ட்ரோன்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் முயற்­சிக்கு ஆளில்லா விமா­னங்­கள் விதி­மு­றை­களில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கண்­ணுக்கு எட்­டும் தூரத்­தில் செல்­லும் (VLOS) ட்ரோன்­களை பயன்­ப­டுத்தி கொவிட்-19 தடுப்­பூ­சி­களை விநி­யோ­கிக்­கும் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள தெலுங்­கானா அர­சுக்கு கடந்த மாதம் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

ட்ரோன் பயன்­பா­டு­களை அதி­க­ரிக்­கும் நோக்­கில், கண்­ணுக்கு எட்­டாத உய­ரத்­தில் (BVLOS) செல்­லும் ட்ரோன்­க­ளைப் பரி­சோ­திப்­ப­தற்­கும் இந்த அனு­மதி நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பரி­சோ­த­னை­களை இம்­மாத இறு­தி­யில் மாநில அரசு தொடங்­க­லாம். இம்­மா­தத் தொடக்­கத்­தில், பார்­வைக்கு எட்­டாத உய­ரத்­தில் செல்­லும் ட்ரோன்­க­ளைப் பரி­சோ­தனை செய்ய 20 நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!