சூறாவளியாக சுழலும் அரசு

சென்னை: கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுத்து நிறுத்த புதி­தா­கப் பதவி ஏற்ற ஸ்டா­லின் தலை­மை­யி­லான தமி­ழக அரசு அடுத்­த­டுத்து அதி­ர­டிப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது.

சென்னை வியா­சர்­பா­டி­யிலுள்ள அம்­பேத்­கர் கலைக்­கல்­லூ­ரி­யில் சித்த மருத்துவம் அளிக்கும் சித்தா கொவிட் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை மா. சுப்பி­ர­ம­ணி­யம் நேற்று தொடங்கி வைத்­தார்.

நிகழ்ச்­சிக்­குப் பின் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த அவர், 240 படுக்­கை­க­ளு­டன் கூடிய இந்த மையத்­தில் 195 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் தமி­ழ­கத்­தில் தற்­போது 12 இடங்­களில் சித்தா கொவிட் சிகிச்சை மையங்­கள் செய­ல்­பட்டு வரு­வ­தா­க­வும் இன்­னும் ஒரு வாரத்­திற்­குள் கூடு­த­லாக 12 மையங்­கள் திறக்­கப்­பட உள்­ள­தா­க­வும் கூறி­னார்.

சுக்குக் கஞ்சி, கபசுர குடிநீர்

இந்த சிகிச்சை மையங்­களில் சுக்குக் கஞ்சி, கப­சுர குடி­நீர், கற்­பூ­ராதி தைலம் உள்­ளிட்ட மருந்­து­கள் மற்­றும் சிறப்­புப் பாரம்­ப­ரிய உண­வு­கள் நோயா­ளி­க­ளுக்கு தரப்­

ப­டு­வ­தா­கக் கூறிய அமைச்­சர், சித்தா யோகா­ச­னப் பயிற்சி, திரு­மூ­லர் பிராணா­யாமம், மூலிகை சிகிச்சை, மன­நல ஆலோ­சனை உள்­ளிட்­ட­வை­யும் வழங்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இது தவிர, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த 11 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட களப்­ப­ணி­யா­ளர்­கள் இன்று (மே 10) முதல் வீடு வீடா­கச் சென்று ஆய்வு மேற்­கொள்ள உள்­ள­தாக அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யம் கூறி­னார். களப்­ப­ணி­யா­ளர்­கள் எந்­தெந்த பகு­தி­களில் ஆய்வு மேற்­கொண்­டார்­கள் என்ற விவ­ரம் ஒவ்­வொரு நாளும் மாலை­யில் வெளி­யி­டப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கடந்­தாண்டு சித்தா, ஆயுர்­வேதம், ஹோமி­யோ­பதி உள்­ளிட்ட மருத்­து­வத்­தின் மூலம் பல­ரும் கொரோ­னா­வி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். சென்­னை­யில் 21 பரி­சோ­தனை மையங்­கள் உள்ள நிலை­யில் மக்­கள் தேவை­யினை கருத்­தில் கொண்டு அந்த எண்­ணிக்­கையை 30ஆக உயர்த்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்­சர் கூறி­னார்.

இதற்­கி­டையே, கொரோனா தடுப்­புப் பணி­களை ஒருங்­கி­ணைக்­கும் நட­வ­டிக்­கை­யாக கட்­டளை மையம் ஒன்று அமைக்­கப்பட்டதற்­கான அர­சா­ணையை தமி­ழக அரசு நேற்று வெளி­யிட்­டது.

இப்­படி ஒரு மையம் ஏற்­ப­டுத்­தப்­படும் என முதல்­வர் மு.க. ஸ்டா­லின் ஏற்­கெ­னவே தெரி­வித்­தி­ருந்­தார். அதன்­படி கட்­டளை மையம் அமைக்­கப்­பட்டு அதற்­கான அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­தாக அர­சா­ணையை தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்­ளது. அந்த அர­சா­ணை­யில், "கொரோனா கட்­டளை மையத்திற்கு ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக தாரேஷ் அக­மத் ஐஏ­எஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். கட்­டளை மையத்­தின் செயல்­பாடு, தரம் குறித்து ஆய்­வு­செய்ய அழ­கு­மீனா என்ற அதி­கா­ரி­யும் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ளார். இக்குழு­வில் ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் நந்­த­கு­மார், எஸ்.உமா, எஸ்.வினீத், கே.பி. கார்த்­தி­கே­யன் ஆகி­யோர் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்," என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மேலும் 104 என்ற எண் மூலம் கட்­டளை மையத்தை மக்­கள் தொடர்புகொள்­ள­லாம் என்­றும் அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் ஆக்­சி­ஜன் இருப்பு மற்­றும் படுக்­கை­யின் எண்­ணிக்­கை­களை தெரிந்­து­கொள்­ள­லாம் என்­றும் அர­சா­ணை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

சித்த மருத்துவ சிகிச்சை மையம்; கொரோனா கட்டளை மையம்; 11,000 களப்பணியாளர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!