கொரோனாவுக்கு ஓர் உயிர்கூட பலியாகக்கூடாது: ஸ்டாலின் அரசு உறுதி

சென்னை: கொரோ­னா­வால் ஓர் உயிர்­கூட பலி­யா­கக் கூடாது என்று அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

மு.க.ஸ்டா­லின் தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யின் முதல் கூட்­டம் தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை 11.30 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்­திற்­கும் மேல் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தின் முடி­வில் 6 முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன.

ரெம்­டெ­சி­விர் மருந்­து­கள் அனை­வ­ருக்­கும் உரிய முறை­யில் விநி­யோ­கிப்­பதை உறுதி செய்ய வேண்­டும். இந்த மருந்து கள்­ளச்­சந்­தை­யில் விற்­ப­தைத் தடுக்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும். கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஓர் உயிர்­கூட பலி­யா­கக் கூடாது.மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள், நோயா­ளி­க­ளுக்கு தர­மான உணவு கிடைத்­திட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

மருத்­து­வ­ம­னை­களில் ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை இல்­லாத வகை­யில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். ஆக்­சி­ஜனை முறை­யாக பயன்­ப­டுத்­து­வதை உறுதி செய்ய வேண்­டும். எந்தச் சூழ­லி­லும் ஆக்­சி­ஜன் வீணா­கக் கூடாது. மருத்­து­வ­ம­னைக்கு வரும் நோயா­ளி­க­ளுக்கு உடனே சிகிச்சை அளிப்­பதை கண்­கா­ணிக்க வேண்­டும். தடுப்­பூசி போடு­வது தொடர்­பாக மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று அமைச்­சர்­க­ளுக்கு முதல்­வர் ஸ்டா­லின் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!