கருணை அடிப்படையில் பயணம்; விண்ணப்பிக்கலாம்

சிங்­கப்­பூர், மலே­சிய மக்­கள் மிக­வும் அவ­சர கார­ணங்­க­ளுக்­காக எல்லை தாண்­டிய பய­ணம் மேற்­கொள்ள இரு நாடு­களும் அண்­மை­யில் ஒப்­பு­தல் அளித்­தன.

இதை­ய­டுத்து அதற்­கான விண்­ணப்­பங்­களை ஏற்­கும் பணியை இரு நாடு­களும் தொடங்­கியுள்ளன.

உடல்­நிலை மோச­மாக பாதிக்­கப்­பட்ட உற­வி­னர்­களை பார்ப்­பது அல்­லது இறு­திச் சடங்­கில் பங்­கேற்­பது போன்ற அவ­சர கார­ணங் ­க­ளுக்கு இரு நாடு­க­ளை­யும் சேர்ந்­த­வர்­கள் இப்­போது முதல் விண்­ணப்­பிக்­க­லாம்.

ஆனால் ஒவ்­வொரு சம்­ப­வத்­தி­லும் இரு­வ­ருக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­படும் என்று மலே­சிய குடி­நு­ழை­வுப் பிரி­வும் ‘ஐசிஏ’ எனும் சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­ய­மும் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­ ம­திக்­கப்­பட்ட பய­ணி­கள் பாது­காப்பு நடை­முறை நிபந்­த­னை­களை பின்­பற்­று­வது அவ­சி­யம். தனி­மைப் படுத்தும் உத்­த­ரவை நிறை­வேற்­று­வது, கொவிட்-19 சோத­னைக்கு உட்­ப­டு­வது போன்­றவை அவற்­றில் அடங்­கும்.

“மருத்­துவ சிகிச்சை அளிக்­கும் இடங்­க­ளுக்கு சென்­று­வர அல்­லது இறு­திச்­ச­டங்­கில் பங்­கேற்க விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு எங்­க­ளு­டைய அதி­கா­ரி­கள் பாது­காப்­பான ஏற்­பா­டு­களை செய்து தரு­வார்­கள்,” என்று ஐசிஏ இணை­யத்­த­ளம் தெரி­வித்­தது. இணை­யம் வழி­யாக விண்­ணப்­பங்­களை சமர்ப்­பிக்க வேண்­டும்.

அனைத்து விண்­ணப்­ப­தா­ரர்­களும் நெருங்­கிய உற­வி­னர்­கள் மர­ணம் அடைந்­த­தற்­கான சான்று அல்­லது உற­வி­னர் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்­தால் அதற்­கான மருத்­து­வ­ரின் கடி­தம், உற­வி­ன­ரு­ட­னான குடும்­பத் தொடர்­பைக் காட்­டும் ஆவ­ணங்­கள், கட­வுச்­சீட்­டின் நகல் உள்­ளிட்ட ஆவ­ணங்­களை இணைக்க வேண்­டும். இதே­போன்ற கார­ணங்­க­ளுக்­காக மலே­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்ள விரும்­பு­வோர் மலே­சிய குடி­நு­ழை­வுப் பிரி­வின் இணை­யத் தளம் வழி­யாக ஆவ­ணங்­க­ளு­டன் விண்­ணப்­பிக்க வேண்­டும்.

இவர்­களும் கொவிட்-19 பரி­சோ­தனை உள்­ளிட்ட பாது­காப்பு நடை­மு­றை­க­ளுக்கு உட்­ப­டு­வது அவ­சி­யம்.

இம்­மா­தம் முற்­ப­கு­தி­யில் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் மலே­சிய அமைச்­சர் ஹிஷா­மு­தீன் ஹுசை­னும் சந்­தித்­துப் பேசி­ய­போது மே 17ஆம் தேதி­யி­லி­ருந்து கருணை அடிப்­ப­டை­யி­லான பய­ணங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­படும் என்று அறி­வித்­த­னர்.

சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே நில­வும் நெருக்­க­மான தொடர்பு கார­ண­மாக இத்­த­கைய ஏற்­பாடு அவ­சி­யம் என்று அப்­போது அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­யி­ருந்­தார்.

தற்போது இரு நாடு­க­ளி­லும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தால் கடு­மை­யான புதிய கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த சனிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து சமூக ஒன்­று­கூ­ட­லுக்­கான வரம்பை சிங்­கப்­பூர் கடு­மை­யாக்­கி­யுள்­ளது. மலே­சி­யா­வும் திங்­கட்­கி­ழ­மை­யன்று மாநி­லம், மாவட்­டங்­க­ளுக்கு இடை­யி­லான நட­மாட்­டத்­துக்­குத் தடை விதித்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!