மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளில் மலரஞ்சலி ஐந்து நலத்திட்டம் தொடக்கம்

சென்னை: மறைந்த முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் 98வது பிறந்­த­நாள் விழா நேற்று கொண் டாடப்­பட்­டது.

சென்னை மெரினா கடற்­கரை யில் அமைந்­துள்ள அவ­ரது நினை விடத்­தில் மலர்­தூவி மரி­யாதை செலுத்­திய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், மக்­க­ளுக்­குப் பயன் நல்­கும் ஐந்து முக்­கிய நலத்­திட்­டங்­க­ளை­தொடங்கி வைத்­தார்.

சென்னை தலை­மைச் செய­ல­கத் தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், 14 வகை­யான மளி­கைப் பொருள் களை வழங்­கு­வது, கொவிட்-19 நிவா­ரண நிதி வழங்­கு­வது உள்­ளிட்ட திட்­டங்­கள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன.

குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்கு கோதுமை மாவு, உப்பு, ரவை, சா்க்கரை, உளுத்­தம் பருப்பு, புளி, கட­லைப் பருப்பு, கடுகு, சீர­கம், மஞ்­சள் தூள், மிள­காய்த் தூள், தேநீர் தூள், குளி­யல் சோப்பு, துணி சோப்பு ஆகிய 14 மளி­கைப் பொருள்­கள் அடங்­கிய பையை முதல்­வர் வழங்­கி­னார்.

அதே­போல், கொரோனா நிவா­ரண நிதி­யின் இரண்­டா­வது தவ­ணை­யாக அனைத்து அரிசி அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் மீண்­டும் ரூ.2,000 ரொக்­கம் வழங்­கும் திட்­ட­மும் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

அத்­து­டன், 'உங்­கள் தொகுதி யில் முதல்­வர்' திட்­டப் பய­னாளி கள் 10 பேருக்­கும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­பட்­டன.

இதைத்­தொ­டர்ந்து 12,959 கோயில்­களில் மாத ஊதி­ய­மின்றி பணி­பு­ரி­யும் 14,000 பேருக்­கும் மேற்­பட்ட அா்ச்ச­கா்­கள், பூசா­ரி­கள், பணி­யா­ளா்­க­ளுக்கு கொரோனா கால உத­வித் தொகை­யாக ரூ.4,000 ரொக்­கம், மளி­கைப் பொருள்­களை வழங்கும் திட்­டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

கொரோனா பணி­யின்­போது மர­ண­ம­டைந்த முன்­க­ளப் பணி யாளர்­க­ளான பத்­தி­ரி­கை­யா­ளா்­கள், மருத்­து­வா்­கள், மருத்­து­வப் பணி யாளா்கள், காவ­லா்­கள், நீதி­ப­தி­கள் ஆகி­யோ­ரின் குடும்­பத்­துக்கு நிவா ரண நிதி வழங்­கும் திட்­டத்­தை­யும் முதல்வா் தொடங்­கி­வைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!