தமிழக மக்களிடம் கடந்த 12 நாள்களில் வெகுவாகக் குறைந்துள்ள கொரோனா பீதி

சென்னை: தளர்­வற்ற ஊர­டங்­கின் பல­னாக தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்பு வேக­மா­கக் குறைந்து வருகிறது. அத்துடன், மக்கள் மத்தியில் நிலவிய பீதியும் குறைந்து வருவதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மாநி­லத்­தில் 12வது நாளாக கிருமி பாதிப்பு குறைந்­துள்­ளது. 36,000 என்ற எண்­ணிக்­கை­யில் இருந்து 25,000 என்ற அள­வுக்கு இந்­தப் பாதிப்பு குறைந்­துள்­ளது. இன்­ன­மும் ஒரு வாரத்­திற்கு ஊர­டங்கு உள்­ள­தால் கொரோனா பாதிப்பு மேலும் கணி­ச­மா­கக் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப் படு­கிறது.

ஜூன் 2ஆம் தேதி நில­வ­ரப்­படி தமி­ழ­கத்­தில் ஒரே நாளில் 25,317 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆனால், இத்­தொற்­றில் இருந்து 32,263 பேர் மீண்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் அதி­க­பட்­ச­மாக கோவை­யில் 3,061 பேருக்கு பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. கோவைக்கு அடுத்­த­ப­டி­யாக சென்­னை­யில் 2,217 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கிருமி பாதிப்பு குறைந்­துள்ள போதி­லும் உயி­ரி­ழப்பு குறைய வில்லை. தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 483 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதற்கிடையே, "தொற்று குறைந்து வரு­வ­தால் பாதிப்­பில் இருந்து மீண்டு விடு­வோம் என்ற நம்­பிக்கை மக்­க­ளி­டம் பிறந்­துள்­ளது. கொரோனா நோயா­ளி­களே இல்லை என்ற நிலை விரை­வில் தமிழகத்தில் ஏற்­படும்," என்று சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!