இந்தியப் பொருளியலில் 15% தமிழ்நாட்டு பங்காகும்

சென்னை: இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் (பொரு­ளி­ய­லில்) 14% முதல் 15% வரை தமிழ்­நாடு பொறுப்பு ஏற்­கும் என்று அந்த மாநி­லத்­தின் புதிய நிதி அமைச்­சர் பிடி­ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் சவால் விடுத்­து உள்­ளார். அதோடு, மாநி­லத்­தின் இதர இரண்டு முன்­னு­ரி­மை­க­ளை­யும் அவர் பட்­டி­ய­லிட்­டார்.

மாநி­லத்­தின் நிதி நிலை­யைச் சரிப்­ப­டுத்­து­வது, கடன் சுமை­யைக் குறைப்­பது ஆகி­யவை அந்த இதர இரண்டு முன்­னு­ரி­மை­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

மனித வள மேம்­பாட்டு அமைச்­சரு­மான திரு தியா­க­ரா­ஜன், தமிழ்­நாடு இந்­திய தொழில்­துறைக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த குறிப்­பிட்ட சில உறுப்­பினர்­களு­டன் கலந்துரையா­டி­னார். சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், குறு நிறுவனங்­க­ளைப் பாது­காப்­பதும் தமி­ழ­கத்­தில் தொழில் நடத்து­வதை எளி­தாக்­கு­வ­தும் அதிக முத­லீ­டு­களை ஈர்த்து வேலை வாய்ப்பு­க­ளைப் பெருக்­கும் என்­று அவர் தெரிவித்தார்.

முத­லீட்டா­ளர்­கள் விரும்­பும் மாநி­ல­மாக தமிழ்­நாடு திக­ழும் என்ற திரு தியா­க­ரா­ஜன், இத­னால் புதிய முத­லீட்­டா­ளர்­கள் மாநி­லத்தை நாடி வரு­வார்­கள். அர­சாங்க- தனி­யார் பங்­கா­ளித்­துவ கூட்­டுத்­தொ­ழில்­கள் அதி­க­ரிக்­கும் என்­றும் கூறி­னார்.

இத­னி­டையே, தமிழ்­நாட்­டில் நிதித்­துறை தொழில்­நுட்ப நகர் ஒன்றை உரு­வாக்க வேண்­டும்­ என்று கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர்­கள் யோசனை தெரி­வித்­த­னர்.

சிறிய, நடுத்­தர நிறு­வங்­க­ளுக்­கான கடன் ஏற்­பா­டு­க­ளைத் திருத்தி அமைக்­க­வேண்­டும் என்­றும் அவர்­கள் கேட்­டுக்­கொண்­ட­னர். மோட்­டார்வாகன தொழில்­துறைக்கு ஊக்கமூட்ட சாலை வரியை 50% குறைக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் கோரி­னர்.

தொழில்­து­றை­யில் எல்­லா­வற்றை­யும் மின்­னி­லக்கமய­மாக்க வேண்டும் என்­றும் அவர்­கள் குரல் கொடுத்­த­னர். மின்­னணு, கணி­னிச் சில்­லு­கள் துறை­யில் முத­லீடுகளை ஈர்க்­கும் அள­வுக்கு கவர்ச்­சி­க­ர­மான கொள்­கை­கள் தேவை என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

மாநில இளை­யர்­க­ளுக்குத் தேர்ச்சி, மறு­தேர்ச்­சி­கள் அவ­சி­யம் என்று அவர்­கள் கூறினர்.

அவர்­க­ளுக்­குப் பதில் அளித்த நிதி அமைச்­சர் திரு தியா­க­ரா­ஜன், இந்த யோச­னை­கள் அனைத்­தை­யும் அது அதற்கு உரிய அமைச்­சி­டம் கொண்டு சென்று தேவை­யா­ன­ அனைத்தையும் செய்­யப்­போ­வ­தா­க உறுப்பினர்களிடம் உறுதி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!