10 ஆண்டுகளாக காணாமல் போன தாயைக் கண்டு நெகிழ்ந்த மகன்கள்

இளை­யான்­குடி: தேவ­கோட்டை அருகே 10 ஆண்­டு­க­ளுக்கு முன் காணா­மல் போன தாய் மீண்­டும் கிடைத்­த­தால் அவ­ரது மகன்­கள் மகிழ்ச்சி அடைந்­த­னர்.

சிவ­கங்கை மாவட்­டம், தேவ கோட்டை தாலுகா கல்­லடியேந்­தலைச் சேர்ந்த வெள்­ளைக்­கண்ணுவின் மனைவி பழ­னி­யம்­மாள், 75, (படம்) சற்று மன­ந­லம் பாதிக்­கப்­பட்டு இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் காணா­மல் போனார்.

அவ­ரது மகன்­கள் துரை­ராஜ், தமிழ்­ச்செல்­வம், சௌந்­தி­ர­ரா­ஜன் ஆகியோர் பல இடங்­களிலும் தேடி வந்­த­னர். ஆனால், தாயைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

காணா­மல் போன பழனியம்­மாள் திரு­வ­னந்­த­பு­ரம் அருகே வெஞ்­ச­ர­மூடு என்ற இடத்­தில் முதி­யோர் இல்­லத்­தில் பராமரிக்­கப்­பட்டு வந்­தார்.

சில வாரங்­க­ளுக்கு முன் சுய­நி­னைவு திரும்­பி­ய­வர் தன் பெயர் பழ­னி­யம்­மாள் என்­றும் சொந்த ஊர் இளை­யான்­குடி அருகே உள்­ளது எனவும் தெரி­வித்துள்ளார்.

முதி­யோர் இல்ல நிர்­வா­கி­கள் தேவ­கோட்டை தாசில்­தார் ராஜ ரத்­தி­னத்­தி­டம் தக­வல் தெரிவித்­த­னர். அவர், பழ­னி­யம்­மா­ளின் மகன் தமிழ்­ச்செல்­வத்­தி­டம் அவ­ரது தாய் உயி­ரோடு இருக்­கும் விவ­ரத்தைக் கூறி­னார். இத­னால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்­தார். பழ­னி­யம்­மாள் அவ­ரது மூன்றா வது மகன் சௌந்­தி­ர­ரா­ஜ­னு­டன் கோபிச்­செட்டிபாளை­யத்­தில் உள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!