சசிகலாவை மீண்டும் பொதுச் செயலாளராக்க தீர்மானம்

தூத்­துக்­குடி: கோவில்­பட்டி அருகே உள்ள விளாத்­தி­கு­ளத்­தில் அதி­முக நிர்­வா­கி­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் சசி­க­லாவை மீண்­டும் அதி­மு­க­வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக்க வேண்­டும் என்­பது உள்­ளிட்ட 11 தீர்­மா­னங்­கள் நிறைவேற்­றப்­பட்டு உள்­ளன.

இந்­தத் தீர்­மா­னம் அதி­முக தலை­மைக்கு கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கருத்து தெரி­வித்து உள்­ள­னர்.

சசி­க­லா­விற்கு எதி­ரா­கப் பேசி வரும் முன்­னாள் அமைச்­சர்­கள் நத்­தம் விசு­வ­நா­தன், ஜெயக்­கு­மார், சி.வி.சண்­மு­கம், கே.பி.முனு­சாமி ஆகி­யோ­ரின் வீடு­கள் முன்பு போராட்­டம் நடத்த உள்­ள­தா­க­வும் தங்­க­ளது தீர்­மா­னம் ஒன்­றில் அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தூத்­துக்­குடி மாவட்­டம், விளாத்தி­கு­ளத்­தில் அதி­மு­க­வின் தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட ஜெய­ ல­லிதா பேர­வை­யின் இணைச் செய­லா­ளர் ரூபம். கே. வேல­வன் தலை­மை­யில் நடந்த கூட்டத்தில், அதி­மு­க­வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக சசி­கலா மீண்­டும் பொறுப்­புக்கு வர வேண்­டும், அதி­முக தொண்­டர்­களைச் சசி­கலா விரும்புவது வர­வேற்­கக் கூடி­யது, சசி­க­லா­வு­டன் பேசி­ய­வர்­களைக் கட்­சித் தலைமை நீக்­கு­வது கண்­டிக்­கத்­தக்­கது, சசி­க­லா­விற்கு எதி­ரா­கப் பேசி வரும் முன்­னாள் அமைச்­சர்­க­ளின் இல்­லங்­கள் முன்பு போராட்­டம் நடத்­து­வது உள்­ளிட்ட 11 தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

சட்­ட­மன்றத் தேர்­த­லுக்கு முன்­பாக அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி­யி­ருக்­கப் ­போ­வ­தாக அறி­வித்த சசி­கலா, தற்­போது நாளும் அதி­முக தொண்­டர்­க­ளுடன் தொலை பேசியில் பேசி வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!