குழந்தைகள் விற்பனை; காப்பக உரிமையாளர் தலைமறைவு

மதுரை: போலி ஆவ­ணங்­கள் மூலம் பல குழந்­தை­கள் விற்­கப்­பட்ட விவ­கா­ரம் தொடர்­பில் காப்­பக அதி­ப­ருக்கு போலி­சார் வலை­வீ­சி­யுள்­ள­னர்.

மதுரை ரிசர்வ் லைன்­கு­டி­யி­ருப்பு வளா­கத்­தில் செயல்­பட்டு வந்த காப்­ப­கத்­தின் உரி­மை­யா­ள­ரான சிவக்­கு­மா­ரையும் நிர்­வா­கி­யான மதார்­ஷா­வையும் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர் என்று மாலை மலர் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

இந்த காப்­ப­கத்­தில் முதி­யோர், மன­ந­லம் பாதிக்­கப்­பட்­டோர், ஆத­ர­வற்ற குழந்­தை­கள், பெண்­கள் என 80க்கும் மேற்­பட்­டோர் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்­த­னர்.

இந்த நிலை­யில் மதுரை மாவட்­டம் மேலூர் அருகே உள்ள சேக்­கிப்­பட்­டி­யைச் சேர்ந்த சமூக ஆர்­வ­லர் அசா­ரு­தீன் என்­ப­வர் தனது கிரா­மத்­தில் ஆத­ர­வின்றி தவித்த ஐஸ்­வர்யா, வயது 22 மற்­றும் அவ­ரது மூன்று குழந்­தை­களை இத­யம் ஆத­ர­வற்­றோர் காப்­ப­கத்­தில் சேர்த்துவிட்­டார்.

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு ஐஸ்­வர்­யா­வின் 3வது குழந்தை மாணிக்­கம் தொற்­றுக்­குப் பலி­யாகி விட்­ட­தா­க­வும் மாந­க­ராட்சி ஊழி­யர்­கள் மூலம் தத்­த­னேரி சுடு­காட்­டில் குழந்தை உடலைப் புதைத்து விட்­ட­தா­க­வும் காப்­ப­கத்­தில் இருந்து அசா­ரு­தீ­னுக்கு தக­வல் கொடுக்­கப்­பட்­டது.

ஆனால் அவர்­க­ளு­டைய ஆவ­ணங்­கள் மீது அசா­ரு­தீ­னுக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது.

இது குறித்து மாவட்ட நிர்­வா­கத்­திற்கு அவர் புகார் கொடுத்­தார். அதன் அடிப்­ப­டை­யில் தாசில்­தார், கிராம நிர்­வாக அதி­காரி, குழந்­தை­கள் நல அலு­வ­லர் மற்­றும் போலி­சார் காப்­ப­கத்­தில் விசா­ரணை நடத்­தி­னர்.

குழந்தை மாணிக்­கம் உடலை புதைத்­த­தாக கூறப்­பட்ட இடத்­தில் கடந்த 2 நாட்­க­ளுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் இறந்த பெண் குழந்­தை­யின் உடல் புதைக்­கப்­பட்டு இருப்­பது தெரி­ய­வந்­தது.

இத­னால் அதிர்ச்சி அடைந்த விசா­ரணைக் குழு, குழந்தை மாணிக்­கம் எங்கே என விசா­ரித்தனர். இதில் மதுரை இஸ்­மா­யில்­பு­ரம் 4வது தெரு­வைச் சேர்ந்த கண்­ணன்-பவானி தம்­ப­தி­ய­ருக்கு ரூ.5 லட்­சத்­திற்கு குழந்தை மாணிக்­கம் விற்­கப்­பட்­டது தெரிய வந்­தது.

இதற்­கி­டை­யில் காப்­ப­கத்­தில் இருந்த ஸ்ரீதேவி என்­ப­வ­ரின் பெண் குழந்­தை­யும் விற்­கப்­பட்டு இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

ஆவ­ணங்களைச் சோதனை செய்­த­தில் காப்பகத்­தில் 16 குழந்­தை­கள் இருந்­தும், தற்­போது குழந்­தை­கள் மாய­மாகி இருக்­கும் அதிர்ச்சித் தக­வல் வெளியாகி­யுள்­ளது.

இதற்­கி­டையே காப்­ப­கத்­தில் இருந்த 38 ஆண்­கள், 35 பெண்­கள், ஏழு குழந்­தை­கள் என மொத்­தம் 80 பேர் வேறு காப்­ப­கங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!