குழந்தைகள் விற்பனை: ‘இதயம்’ நிறுவனர், உதவியாளர் கைது

மதுரை: மது­ரை­யில் ஆத­ர­வற்­றோர் காப்­ப­கத்­தில் இருந்த குழந்­தை­க­ளைப் பல லட்சம் ரூபாய்க்கு விற்­பனை செய்த விவ­கா­ரம் தொடர்­பில், தேடப்­பட்டு வந்த காப்­பக நிர்­வா­கி­யும் அவ­ரது உத­வி­யா­ள­ரும் போலிஸ் வலை­யில் சிக்­கி­னர்.

'இத­யம்' அறக்­கட்­ட­ளை­யின் நிறு­வ­னர் சிவக்­கு­மார், 40, அவ­ரது உத­வி­யா­ளர் மதர்ஷா, 36, ஆகி­யோர் கடந்த ஐந்து நாள்­க­ளாக தலை­ம­றை­வா­கி­னர்.

இவர்­கள் நேற்று முன்­தி­னம் இரவு கேர­ளா­வுக்கு காரில் தப்­பிச் செல்ல முயன்­ற­போது, தேனி மாவட்­டம், போடி ரங்­க­நா­த­பு­ரத்­தில் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், சிவக்­கு­மார், மதர்ஷா ஆகி­யோரை மதுரை தல்­லா­கு­ளம் காவல்­நி­லை­யத்­திற்­குக் கொண்டு வந்த தனிப்­படை போலி­சார், அவர்­க­ளி­டம் விடிய விடிய விசா­ரணை நடத்­தி­னர்.

நேற்று மாலை நீதி­பதி வீட்­டில் முன்­னி­லைப்­ப­டுத்தி, அதன்­பின்­னர் காவ­லில் எடுத்து விசா­ரிக்­க­வும் திட்­ட­மிட்டு இருந்­த­னர்.

கொரோனா கிருமி பாதிப்­பால் இறந்­து­விட்­ட­தாக நாட­க­மாடி, காப்­பகத்­தில் இருந்த மாணிக்­கம், 1, தனம்­மாள், 2, ஆகிய இரு குழந்­தை­க­ளை­யும் எட்டு லட்­சத்­துக்கு விற்­பனை செய்­துள்­ள­தா­கக் கூறப் படுகிறது.

இதை­ய­டுத்து, குழந்­தை­களை விற்ற, சட்­ட­வி­ரோ­த­மாக தத்­தெ­டுத்த நான்கு பெண்­கள் உள்­பட ஏழு பேரை ஏற்கெனவே போலி­சார் கைது செய்­த­னர்.

காப்­ப­கத்­தில் இருந்த 16 குழந்­தை­களில் இரு குழந்­தை­கள் மீட்­கப்­பட்ட நிலை­யில், மேலும் 14 குழந்­தை­க­ளின் நிலை குறித்து போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, மற்ெறாரு சம்­ப­வத்­தில் மதுரை ஜெய்ஹிந்த்­பு­ரம் பகு­தி­யில் சாலை­யோ­ரம் வசித்து வந்த சித்ரா என்ற மன­நலம் பாதிக்­கப்­பட்ட பெண்­ணி­டம் இருந்து குழந்­தையை வாங்­கிய தம்பதியர் ஆறு பேர், போலிச் சான்­றி­தழ் வழங்­கிய ஒரு­வர் என எழு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் குழந்­தை­கள் விற்­கப்­ப­ட­வில்லை என்பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!