மின்சார விபத்தை தடுக்க ஆர்.சி.டி. கருவியைப் பொருத்த உத்தரவு

சென்னை: வீடு­கள், கடை­கள், தொழிற்­சா­லை­கள், பள்ளி, கல்­லூ­ரி­கள், மருத்­து­வ­ம­னை­கள், பூங்­காக்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள மின் இணைப்­பு­களில் ஆர்.சி.டி. என்ற உயிர் காக்­கும் சாத­னத்தை பொருத்­த­வேண்­டும் என்று தமிழ் நாடு மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

மின்­சார விபத்­து­க­ளைத் தடுத்து, மனித உயிர்­களை காக்க உத­வும் இந்­தக் கரு­வியை பொருத்­தா­விடில் மின் இணைப்பு வழங்­கப்­படாது என­வும் அது எச்­ச­ரிக்கை செய்­துள்­ளது.

தமிழ்­நாடு மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யம், மின் பகிர்­மா­னம் தொடர்­பில் புதிய விதி­மு­றை­களை நடை­மு­றைக்கு கொண்டு வந்துள்ளது.

மின்­ப­ழுது, மின்­க­சி­வால் ஏற்­படும் விபத்­து­க­ளைத் தடுக்­கும் வித­மாக வீடு­கள், கடை­களில் இந்த ஆர்.சி.டி. (ரெசி­டு­யல் கரன்ட் டிவைஸ்) என்ற சாத­னத்­தைப் பொருத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

புதி­தாக மின் இணைப்பு கோரும் விண்­ணப்­ப­தா­ரர்­கள் ஆர்.சி.டி. என்ற உயிர் காக்­கும் சாத­னத்தைக் கட்­ட­டத்­தில் பொருத்தி, பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என ஆணை­யம் கூறியுள்­ளது.

ஏற்­கெனவே, மின் இணைப்பு பெற்­ற­வர்­களும் இந்தச் சாத­னத்தை பொருத்­திக்கொள்­ள­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"ஆர்.சி.டி. சாத­ன­மா­னது, 'சுவிட்ச்' போன்­றது. தானா­கவே இயங்­கக்­கூ­டி­யது. வீடுகளில் மின் விநி­யோ­கம் துவங்­கும் இடத்­தில் பொருத்த வேண்­டும்.

"வீட்­டில் உள்ள இஸ்­திரி பெட்டி, மாவு அரைக்­கும் இயந்­தி­ரம் போன்ற சாத­னங்­கள் பழு­தாகி இருந்து, அதை கவ­னிக்­கா­மல் இயக்­கும்­போது 'ஷாக்' அடிக்­கும் சம­யத்­தில் ஆர்.சி.டி. சாத­னம் தானா­கவே செயல்­பட்டு, மின் விநி­யோ­கத்தைத் துண்­டிக்­கும்.

"அதன்பிறகு பழு­தான சாத­னத்தை மின் இணைப்­பில் இருந்து அகற்­றி­விட்டு, ஆர்.சி.டி. சாத­னத்தை மீண்­டும் இயக்கி, மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம். இதனால், மின்விபத்து, அத­னால் ஏற்­படும் உயிரிழப்பு தடுக்­கப்­படும்," என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!