இன்று டெல்லி விரையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் மீண்டும் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு

சென்னை: தமி­ழக மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தற்­கான மருந்து போதிய அளவு இல்­லா­மல் மீண்­டும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை முதன்மைச் செய­லா­ளர் டாக்­டர் ஜெ. ராதா­கிருஷ்­ணன் தெரி­வித்துள்­ளார்.

மத்­திய அர­சி­டம் இருந்து பெறப்­படும் இந்த தடுப்­பூசி மருந்து இனி 11ஆம் தேதி­தான் கிடைக்­கும் என­வும் அவர் மேலும் தெரிவித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்கை தினந்ே­தா­றும் குறைந்து வரு­கிறது.

இருப்­பி­னும், டெல்டா வகை கொரோனா, மூன்­றா­வது அலை அச்­சு­றுத்­தல் ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக பொது­மக்­கள் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள அதிக ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் மீண்­டும் கொவேக்­சின், கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி மருந்துக்கு தட்­டுப்­பாடு நிலவுவதால் தடுப்­பூசி போடும் பணி நிறுத்­தப்­பட்டு, பல்­வேறு பகுதி மக்­களும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, மருத்­து­வத் துறை அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன், செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் ஆகி­யோர் இன்று டெல்­லிக்கு பய­ணம் மேற்­கொள்­கின்­ற­னர்.

அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "தடுப்­பூசி விவ­ரத்தை தினந்­தோறும் வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்து வரு­கி­றோம். இன்­றைய நிலை­யில், மாநிலத்தில் கொரோனா தடுப்­பூசி கையி­ருப்பு இல்லை," என்று தெரி­வித்­த­வர், "நானும் சுகா­தா­ரத்­ துறை செய­லா­ளர் ராதா­கிருஷ்­ண­னும் நாளை டெல்­லிக்கு பய­ணம் செய்ய உள்ேளாம். இந்­தப் பயணத்­தின்­போது தமி­ழ­கத்­திற்கு போது­மான அள­வில் தடுப்­பூசியை ஒதுக்­கும்­படி மத்­திய அர­சுக்கு கோரிக்­கை­களை முன்வைக்க உள்­ளோம்," என்று கூறினார்.

டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமி­ழ­க மக்கள் ஆர்­வத்­து­டன் தடுப்பூசி போட வரு­வ­தால், மத்­திய அரசு கூடு­த­லாக அனுப்­பிய தடுப்­பூ­சி­ மருந்து போத­வில்லை. தற்­போது கையி­ருப்­பில் இருந்த தடுப்­பூ­சி­ மருந்துகளும் நேற்றுடன் முடி­வ­டைந்து விட்டன. இப்போது தடுப்­பூசி தட்­டுப்­பாடு நில­வு­கிறது.

"அத்துடன், 11ஆம் தேதிதான் அடுத்த தவணை தடுப்­பூ­சி மருந்து கிடைக்­கும் என மத்­திய அரசு கூறி­யுள்­ளது. ஆனால், முன்கூட்­டியே தடுப்­பூ­சி மருந்தை வழங்க வேண்­டும் என தொடர்ந்து மத்­திய அரசை வலி­யு­றுத்தி வரு­கி­றோம்," என்று தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!