‘பிரதமரின் உயிர் காக்கும் காவலர் விருதால் மட்டற்ற மகிழ்ச்சி’

தஞ்சாவூர்: ஆற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டி ருந்த சிறுவனை, தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் கன நேரத்தில் ஆற்றுக்குள் குதித்துக் காப்பாற்றியுள்ளார் ராஜ் கண்ணன் என்ற காவலர்.

இவருக்குப் பிரதமரின் உயிர் காக்கும் விருது வழங்கப்பட உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-19ஆம் ஆண்டிற் கான விருதுக்கு நாடு முழுவதும் மொத்தம் 14 பேர் தேர்வாகி உள்ள நிலையில், அவர்களுள் ஒருவராக தனக்கும் இந்த விருது கிடைப்பதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவ தாக காவலர் ராஜ் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

"இதுபோன்று அனைத்து காவலர்களும் எந்த நேரத்திலும் பொதுமக்களின் பாதுகாப்பில் கவ னம் செலுத்தவேண்டும்," எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

தஞ்­சா­வூர் மாவட்­டம், தென்­ன­ம­நாடு கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் ராஜ்­கண்­ணன், 35. இவர், தற்போது பட்டுக்கோட்டை காவல் நிலை யத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தஞ்சை கல்­லணை கால்­வாய் ஆற்­றில் தவறி விழுந்து, சிறு­வன் ஒரு­வன் தத்­த­ளித்­துள்­ளான்.

ஆற்­றங்­க­ரை பக்கமாக நடை பயிற்சி சென்­ற­வர்­கள், தீய­ணைப் புப் படை­யி­னரை அழைத்துவிட்டு, அங்கேயே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்­டி­ருந்­த­னர்.

அப்போது, அவ்­வ­ழியே சென்ற ராஜ்­கண்­ணன், உட­ன­டி­யாக ஆற்­றில் குதித்து 500 மீட்­டர் தூரம் அடித்துச் செல்­லப்­பட்டு, தண்­ணீ­ரில் தத்­த­ளித்த சிறு­வனைக் காப்­பாற்­றி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!