அமைச்சர்: விரைவில் வீடு தேடி வரவுள்ள மருந்து, மாத்திரைகள்

சென்னை: தமி­ழ­கத்­தின் 38 மாவட்­டங்­க­ளிலும் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்­கள் பய­ன­டை­யும் வகை­யில் 'மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்' என்ற புதிய திட்­டம் விரை­வில் தொடங்­கப்­பட உள்ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

நீரி­ழிவு, ரத்த அழுத்­தம் உள் ளிட்ட நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்களைக் கண்டறிந்து, அவர்­களின் வீடு­களுக்கே சென்று மருந்­து, மாத்திரை­கள் வழங்கும் பணி­யை முதல்­வர் விரைவில் தொடங்கி வைக்­க­வுள்­ள­தாகவும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

விரு­கம்­பாக்­கத்­தில் செய்தி­யாளர்­க­ளிடம் அமைச்­சர் கூறு­கை­யில், "மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்' திட்டத்தின் முதல்கட்­ட­மாக நீரி­ழிவு, ரத்த அழுத்­தம் பாதிப்புகளுடன் உள்ள 20 லட்சம் நோயாளிகளின் வீடு­க­ளுக்­குச் சென்று மருந்து, மாத்­திரைகளை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஊர­டங்கு காலகட்டத்­தில் நீரிழிவு, ரத்த அழுத்­தம் பாதிப்பால் அவதிப்படுவோர் மருத்­து­வ­மனைக்­குச் சென்று மருந்து, மாத்­தி­ரை­கள் வாங்­கு­வதில் சிரமத்தை எதிர்நோக்கி வரு கின்றனர். இதைக் கருத்­தில் கொண்டு, முதல்­வ­ரின் ஆலோ­ச­னை­ப்படி வீடு­க­ளுக்­குச் சென்று மருந்து, மாத்­தி­ரை­கள் வழங்­கு­வதற்கு முடிவெடுத்து உள்ளோம்.

"அனைத்து மாநி­லங்­க­ளி­லும் 45 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் பணி வேக­மாக நடை­பெற்று வரு­கிறது. பிர­த­மர் கூறி­ய­படி 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கப்­பட்­டுள்­ளது," என்று தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!