முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் அதிரடி சோதனை

50க்கு மேற்பட்ட இடங்களில் ஆய்வு; 17 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அதி­மு­க­வின் முன்­னாள் அமைச்­சர் எஸ்.வி.வேலு­ம­ணிக்­குச் சொந்­த­மான 52 வீடு­களில் லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை மேற்­கொண்­ட­னர்.

கோயம்­புத்­தூ­ரில் 35 வீடு­க­ளி­லும், சென்­னை­யில் 15 வீடு­க­ளி­லும் காஞ்­சி­பு­ரம் மற்­றும் திண்­டுக்­கல் ஆகிய இடங்­களில் தலா ஒரு வீட்­டி­லும் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். சென்­னை­யில் எம்­எல்ஏ விடு­தி­யில் தங்­கி­யி­ருந்த வேலு­ம­ணி­யி­டம் மணிக்­க­ணக்­கில் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அங்கு சோதனை நடை­பெற்று வரு­வதை அறிந்த ஆத­ர­வா­ளர்­களும் பத்­தி­ரி­கை­யா­ளர்­களும் அப்­ப­கு­தி­யில் குவிந்­த­னர். எனவே, அதி­முக வட்­டா­ரத்­தில் பதற்­ற­மும் அச்­ச­மும் நில­வி­யது.

லஞ்ச ஒழிப்­புக் காவல்­து­றை­யின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து அதி­முக ஆத­ர­வா­ளர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அசம்பா­வி­தங்­கள் ஏதும் நடை­பெறா­மல் தடுப்­ப­தற்கு பதற்­ற­மான பகு­தி­களில் காவ­லர்­கள் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். சோதனை நடை­பெற்று வரும் நிலை­யில் எஸ்.பி. வேலு­மணி உள்­ளிட்ட 17 பேர் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அர­சின் பல்­வேறு ஒப்­பந்­தங்­களை தனது அதி­கா­ரத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி தன் சகோ­த­ரர், உற­வி­னர்­கள் ஆகி­யோ­ருக்­குக் கொடுத்து முறை­கேடு செய்து சொத்து சேர்த்­த­தாக வந்த புகாரை அடுத்து அவர் மீது சொத்­துக் குவிப்பு வழக்கு பதி­வு­செய்­யப்­பட்­டது. ரூ. 1.20 கோடி மோசடி செய்­த­தாக முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி வேலு­மணி மீது திரு­வேங்­க­டம் என்­ப­வர் புகார் அளித்­தி­ருந்­தார்.

சென்னை, வேளச்­சே­ரி­யில் உள்ள வேலு­ம­ணி­யின் உற­வி­னர் சந்­தி­ர­சே­கர் வீடு, கோடம்­பாக்­கம் ரெங்­க­ரா­ஜ­பு­ரத்­தில் 'கேசிபி இன்­ஃப்ரா லிமி­டட்' நிறு­வ­னம் உள்­ளிட்­ட­வற்­றி­லும் சோதனை நடை­பெற்று வரு­கிறது.

மேலும், ஒப்­பந்த முறை­கேடு தொடர்­பாக சென்னை மாந­க­ராட்­சித் தலை­மைப் பொறி­யா­ளர் நந்­த­கு­மார் வீட்­டி­லும், சென்னை ஆழ்­வார்­பேட்­டை­யில் உள்ள நமது அம்மா நாளி­தழ் அலு­வ­ல­கத்­தி­லும் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்­ட­னர்.

'நமது அம்மா' நாளி­த­ழின் வெளி­யீட்­டா­ள­ரும் வேலு­ம­ணி­யின் நெருங்­கிய நண்­ப­ரு­மான சந்­தி­ர­சே­க­ரின் வீடு, மாத­வ­ரத்­தில் உள்ள பால் பண்ணை பேங்க் கால­னி­யில் உள்ள கட்­டு­மான நிறு­வ­னத்­தி­லும் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் சோதனை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!