சிதிலமடைந்த 7,500 வீடுகள் மறுசீரமைப்பு

அமைச்சர்: ஏழைகளுக்கு நூறாயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்

சென்னை: தலை­ந­கர் சென்­னை­யி­லும் பிற நக­ரங்­க­ளி­லும் குடிசை மாற்று வாரி­யத்­தால் கட்­டப்­பட்டு, சிதி­லம் அடைந்த நிலை­யில் உள்ள 7,500 அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள் நடப்பு நிதி­யாண்­டில் மறு­கட்­டு­மா­னம் செய்­யப்­படும் என குடிசை மாற்று வாரி­யம், ஊர­கத் தொழில்­துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­காக ரூ.1,200 கோடி ஒதுக்­கப்­படும் என்­றும் பேர­வை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

முந்­தைய அதி­முக ஆட்­சிக் காலத்­தில் கட்­டப்­பட்ட பல்­வேறு குடி­யி­ருப்­பு­கள், வீடு­கள் தரம் குறித்து தேர்­த­லுக்கு முன்பு திமுக தரப்­பில் இருந்து பல்­வேறு கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன.

மேலும், வாரிய வீடு­கள் பல விற்­ப­னை­யா­க­வில்லை என்­றும் திமுக அப்­போது சுட்­டிக்­காட்டி இருந்­தது.

இந்நிலையில், பேரவையில் பேசிய அமைச்­சர் அன்­ப­ர­சன், அதி­முக ஆட்­சிக்­கா­லத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட 61 குடி­யி­ருப்­புத் திட்­டங்­க­ளின்கீழ் கட்­டப்­பட்ட சுமார் 20 ஆயி­ரம் வீடு­கள் இன்­னும் காலி­யாக இருப்­ப­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

குடிசை மாற்று வாரி­யத்­தால் கட்­டப்­பட்ட குடி­யி­ருப்­பு­கள் நக­ரப் பகு­தி­யில் இருந்து வெகுதூரத்­தில் இருப்­ப­தால் மக்­கள் அங்கு செல்ல முடி­ய­வில்லை என்­றும் அதி­முக அரசு திட்­ட­மின்­றிச் செயல்­ப­ட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் சாடி­னார்.

கட்­டு­மா­னப் பணி­க­ளின் தரத்­தினை பல்­வேறு நிலை­களில் உறுதி செய்ய இந்­திய தொழில்நுட்பக் கழ­கம் (ஐஐடி), அண்ணா பல்­கலைக்­க­ழ­கம் போன்ற மேன்­மை­யான மூன்­றாம் தரப்பு சார்ந்த தரக்­கட்­டுப்­பாட்டு வல்­லு­நர் குழுக்­கள் அமைக்­கப்­படும் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­தார்.

மறு­கட்­டு­மா­னம் செய்­யும் காலத்­தில் பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­படும் ரூ.8 ஆயி­ரம் கரு­ணைத் தொகை­யா­னது இனி ரூ.24 ஆயி­ர­மாக உயர்த்தி வழங்­கப்­படும் என்று தெரி­வித்த அமைச்­சர், பரா­ம­ரிப்­பின்றி பழு­த­டைந்த அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள் அனைத்­தும் ரூ.70 கோடி செல­வில் எழில்­மிகு தோற்­றப் பொலிவு பெறும் வகை­யில் புன­ர­மைக்­கப்­படும் என்­றும் கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் வறுமை நிலை­யில் உள்ள வீடில்லாதவர்களுக்கு என நூறாயிரம் வீடு­களும் குடி­யிருப்­பு­களும் கட்­டப்­படும் என்­றும் அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் இந்தக் கட்­டு­மா­னப் பணி­கள் முடிக்­கப்­பட்டு அவை பய­னா­ளர்­க­ளி­டம் உரிய நேரத்தில் ஒப்­ப­டைக்­கப்­படும் என்றும் அமைச்­சர் அன்­ப­ர­சன் தெரி­வித்­தார்.

"தற்­போது இரு­ப­தா­யி­ரம் வீடு­கள் தயார்நிலை­யில் உள்­ளன. மீத­முள்ள வீடு­க­ளின் கட்­டு­மா­னப் பணி­கள் பல்­வேறு கட்­டங்­களில் உள்­ளன. எனி­னும் குறித்த நேரத்­தில் அந்தப் ப­ணி­கள் முடி­வ­டை­வதை அரசு உறுதிசெய்­யும்.

"மேலும் சிதி­ல­ம­டைந்த நிலை­யில் உள்ள அனைத்துக் குடி­யி­ருப்­பு­கள், வீடு­க­ளின் மறு­கட்­டு­மா­னப் பணி நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் முடிக்­கப்­படும்.

"இனி கட்­டப்படும் அனைத்து குடியிருப்புகளும் தனி­யார் கட்­டு­மா­னத் தரத்­துக்கு இணை­யாக இருப்பதையும் அரசு உறுதிசெய்யும்," என்று அமைச்­சர் அன்­ப­ர­சன் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!