திருமண வலைத்தளத்தில் அறிமுகமாகி, லட்சக்கணக்கில் பணம்பறித்த நைஜீரியர்கள் கைது திருமண ஆசை காட்டி மோசடி

சென்னை: பெரம்பூரைச் சேர்ந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நான்கு லட்சத்துக்கும் மேலாக பணம் பறித்துள்ள நைஜீரிய நாட்டு ஆடவர்களைச் சென்னை போலிசார் கைது செய்தனர்.

சிலிடஸ் கேஸ்சுக்வு, 23, பாலினஸ் சிகேலுவோ, 31, ஆகிய இரு நைஜீரியர்களையும் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலிசார் டெல்லியில் கைது செய்தனர்.

அவர்களை, டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த ஆடவர்களுடன் சம்பந்தப்பட்ட இரு பெண்கள் உள்பட மேலும் சிலரையும் போலிசார் தேடி வருகின்றனர்.

நைஜீரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விவாகரத்தான ஆண்கள், பெண்களைக் குறி வைத்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியது அம்பலமானது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் மறுமணம் செய்துகொள்வதற்காக 'ேமட்ரி ேமானியல்' திருமண வலைத் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

அப்போது, அவரைத் தொடர்பு கொண்ட சலீம் என்ற ஆடவர், நெதர்லாந்தில் மருத்துவராகப் பணி புரிவதாக அறிமுகமாகி கைபேசி மூலம் பேசி வந்துள்ளார்.

நாளடைவில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் இருந்து படிப்படியாக நான்கரை லட்சம் பணத்தைச் சுருட்டியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகமடைந்த பெண் 'மேட்ரிமோனி' நிர்வாகத்திடம் விசாரித்தபோது மோசடிக் கும்பல் பணம் பறித்தது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த பெண் மத்திய குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 'ஆப்பரேசன் டி' என்ற பெயரில் தனிப்படை போலிசார் விசாரணை யைத் துரிதப்படுத்தினர்.

பெரம்பூர் பெண் பணம் செலுத் திய வங்கிக் கணக்கு, சலீம் பேசிய கைபேசி எண் ஆகியவற்றை ஆய்வு செய்த போலிசார், டெல்லி அருகே உத்தம் மாவட்டத்திலுள்ள துவாரகா பகுதிக்கு உடனடியாக விரைந்து, அங்கிருந்த இரு நைஜீரியர்களைக் கைது செய்தனர்.

விசாரணையில், சலீம் என்ற பொய்யான பெயருடன் பெண்ணு டன் பேசியதையும் இதேபாணியில் மறுமணம் செய்துகொள்ள விரும்பும் 15க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண் களை ஏமாற்றி பணம் பறித்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக 'ஒன் இந்தியா' ஊடகச் செய்தி தெரி வித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!