ஸ்டாலின்: கற்றல் இழப்பை சரிசெய்ய இயக்கம்

சென்னை: இவ்­வு­ல­கில், தன்­னை­விட தன்­னி­டம் கற்­ற­வர் பெற்ற வெற்­றிக்கு மகிழ்ச்சி அடை­யும் ஒரே இனம் 'அர்­ப­ணிப்­பு­மிக்க ஆசி­ரி­யர்' இனம் மட்­டுமே என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

கொரோனா பெருந்­தொற்று காலத்­தில் மாண­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட கற்­றல் இழப்பை சரி செய்ய, அரசு ஓர் இயக்­கத்தை தொடங்க இருக்­கிறது என்­றும் அதனை ஆசி­ரி­யர்­கள் முன்­னின்று வழி­ந­டத்தித் தர­வேண்­டும் என்றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

ஆசி­ரி­யர் தின விழா­வை­யொட்டி, மாநில நல்­லா­சி­ரி­யர் விருது பெற்ற ஆசி­ரி­யர்­க­ளு­டன் காணொளி வசதி மூலம் உரை­யா­டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனை­வ­ருக்­கும் கல்வி, செயல்­வ­ழிக் கற்­றல், படைப்­பாற்­றல் கல்வி, அனை­வ­ருக்­கும் இடை­நி­லைக் கல்வி என, கல்­வி­யின் இன்­றி­ய­மை­யாமை உணர்ந்து அர­சால் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் பல்­வேறு புதிய திட்­டங்­களை கல்வி நிலை­யங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­வது ஆசி­ரி­யர்­கள்­தான் என்று சுட்டிக்காட்டினாரா்.

அண்­மை­யில் வெளி­யான தமி­ழக அர­சின் நிதி­நிலை அறிக்­கை­யில், 2021ஆம் ஆண்டு பள்­ளிக்­கல்­வித்­து­றைக்­கென ரூ.32,599 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தனி ஒரு துறைக்கு ஒதுக்­கப்­படும் அதி­க­பட்ச தொகை இது என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் தெரிவித்தார்.

கொரோனா பெருந்­தொற்று காலத்­தில் நல்­லா­சி­ரி­யர்­கள் பலர் 'வீடு­தே­டிக் கல்வி வழங்­கு­தல்' என்ற கொள்­கை­யோடு மாண­வர்­க­ளின் இருப்­பி­டங்­க­ளுக்கே சென்று கல்வி கற்­பித்­தது பாராட்­டுக்­கு­ரிய செயல் என்­றார் முதல்­வர்.

"இது­போன்ற சிறப்பு முயற்­சியை அனைத்து குக்­கி­ரா­மங்­க­ளுக்­கும் எடுத்­துச்­சென்று பெருந்­தொற்­றுக் காலத்­தில் ஏற்­பட்ட கற்­றல் இழப்­பைச் சரி செய்ய அரசு ஓர் இயக்­கத்­தைத் தொடங்க இருக்­கிறது," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!