இடையூறு ஏற்படுத்தவே புதிய ஆளுநர்: அழகிரி சந்தேகம்

சென்னை: தமி­ழக முதல்­வர் ஸ்டா­லி­னுக்கு இடை­யூறு ஏற்படுத்தும் வகை­யி­லேயே மாநி­லத்­தின் புதிய ஆளு­ந­ராக ஆர்.என்.ரவி நிய­மிக்கப்பட்­டுள்­ள­தாக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி சந்­தே­கம் தெரி­வித்­துள்­ளார்.

பஞ்­சாப், தமி­ழ­கம் ஆகிய இரு மாநி­லங்­க­ளுக்­கும் ஆளு­ந­ராக இருந்த பன்­வா­ரி­லால் புரோ­கித், தற்­போது முழு நேர பஞ்­சாப் ஆளு­ந­ராக நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ளார். எனவே, அவ­ருக்­குப் பதி­லாக நாகா­லாந்து மாநில ஆளு­ந­ராக இருந்த ஆர்.என்.ரவி தமி­ழ­கத்­தின் புதிய ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

பீகா­ரைச் சேர்ந்த ஆர்.என்.ரவி ஐபி­எஸ் அதி­கா­ரி­யா­வார். சிபிஐ, இந்­திய‌ உள­வுத்து­றை­யின் சிறப்பு இயக்­கு­ந­ரா­க­வும் பணி­யாற்­றிய அவர், 2012ஆம் ஆண்­டில் ஓய்வு பெற்­றார். பின்­னர் பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றி வந்தவர், 2019ஆம் ஆண்டு முதல் நாகா­லாந்து ஆளு­ந­ரா­கப் பதவி வகித்து வரு­கி­றார்.

நாகாலாந்து கிளர்ச்­சி­யா­ளர்­க­ளு­டன் அமைதி ஒப்­பந்­தம் ஏற்­பட முக்­கிய கார­ண­மான ஆர்.என்.ரவி தற்­போது தமிழ்­நாட்­டின் புதிய ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ரது நிய­ம­னத்­துக்கு பாமக, அதி­முக, பாஜக உள்­ளிட்ட பல்­வேறு கட்­சி­கள் வர­வேற்பு தெரி­வித்­துள்­ளன.

இது­கு­றித்து முதல்­வர் ஸ்டா­லின் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், ''தமிழ்­நாட்­டின் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டு இ­ருக்­கும் ஆர்.என்.ரவிக்கு எனது வணக்­க­மும் வாழ்த்­தும். தங்­க­ளது வருகை தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கும் வளத்­துக்­கும் ஊக்­க­ம­ளிப்­ப­தாக இருக்­கட்­டும்," என்று வாழ்த்து­செய்­தி­ பதி­விட்­டுள்­ளார்.

இந்த நிலை­யில், ஸ்டா­லி­னுக்கு இடை­யூறு செய்­யும் வகை­யி­லேயே ஆர்.என்.ரவியை ஆளு­ந­ராக மோடி அரசு நிய­மித்­தி­ருக்­கி­றதோ என்று சந்­தே­கப்­ப­டு­வ­தாக தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

ஆர்.என்.ரவியை ஆளு­ந­ராக நிய­மித்து ஜன­நா­ய­கப் படு­கொலை நடத்­து­வ­தற்கு ஆயு­த­மா­கப் பயன்

­ப­டுத்த மோடி அரசு முயன்­றால், அதனை எதிர்த்து ஜன­நா­ய­கத்­தின் மீது நம்­பிக்­கை­யுள்ள அனைத்து கட்­சி­களும், அமைப்­பு­களும் மக்­க­ளைத் திரட்­டி போராட வேண்­டிய சூழல் உரு­வா­கும் என்­றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!