2 மடிக்கணினிகளோடு சென்ற நிதி அமைச்சருக்கு சோதனை

சென்னை: தமி­ழக நிதி அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், வியா­ழக்­கி­ழமை காலை தூத்­து­க்குடி செல்­வதற்­காக சென்னை விமான நிலையம் சென்­றார்.

அங்கு அவ­ரு­டைய பையை சோத­னை­யிட்ட மத்­திய தொழில்­துறை பாது­காப்­புப்­படை ஊழி­யர் பையில் இரண்டு மடிக்­க­ணி­னி­கள் இருந்­த­தைக் கண்­டார்.

எந்­த­வொரு பய­ணி­யும் இரண்டு மடிக்­க­ணி­னி­களை எடுத்­துச் செல்ல அனு­மதி இல்லை என்று அந்த ஊழி­யர் கூறி­யதை அடுத்து அமைச்­ச­ருக்­கும் அவ­ருக்­கும் வாக்கு­வா­தம் ஏற்­பட்­டது.

விமா­னப் பய­ணி­கள் இரண்டு மடிக்­க­ணி­னி­களை எடுத்­துச் செல்­லக்­கூ­டாது என்று கூறும் விதி­முறை­கள் எது­வும் இல்லை என்று அமைச்­சர் விளக்­கம் அளித்­தார்.

அத­னை­ய­டுத்து அமைச்­ச­ருக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

இது பற்றி கருத்து கூறிய சென்னை விமா­ன­ நி­லைய பேச்­சா­ளர், தக­வல் தொடர்பு குறை­பாடு கார­ண­மாக பிரச்­சினை ஏற்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் உட­ன­டி­யாக அமைச்­ச­ரி­டம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!