ரூ.1,112 கோடி கடன் வழங்கும் உலக வங்கி சென்னையை உலகத் தரத்துக்கு இணையாக உருமாற்ற ஏற்பாடு

புது­டெல்லி: தமி­ழ­கத்­தின் தலை நக­ரான சென்­னையை உல­கத்­த­ரம் வாய்ந்த நக­ராக விளங்­கச் செய்வ தற்கு தமிழ்­நாட்­டுக்கு (150 மில்லி யன் அமெ­ரிக்க டாலர்) ரூ.1,112 கோடி கடனை வழங்க உலக வங்கி ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இந்­தக் கட­னு­த­வி­யால் சென்னை நக­ரம் புதுப்­பொ­லிவு பெறு­வ­து­டன் பல்­வேறு துறை­களும் மேம்­ப­டுத்­தப் பட்டு மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் உய ரும் என்­றும் கூறப்­ப­ட்டுள்ளது.

இந்­தி­யா­வில் அதிக மக்­கள் தொகை­யைக் கொண்ட ஏழா­வது மாநி­ல­மாக தமிழ்­நாடு உள்ளது.

நாட்டிலேயே அதிக மக்­கள் தொகையைக் கொண்ட நான்­கா­வது நகரமாக சென்னை இருப்பதாக வும் இங்கு ஒரு கோடியே ஒன்­பது லட்­சம் ேபர் வசிப்­ப­தா­க­வும் தினத்­தந்தி நாளி­தழ் தக­வல் சுட்­டிக் காட்­டி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், சென்­னையை உல­கத்­த­ரம் வாய்ந்த நக­ராக உரு மாற்­றும் திட்­டத்­துக்­காக அர­சுக்கு ரூ.1,112 கோடி கடனை வழங்க உலக வங்கி இசைந்­துள்­ளது.

இந்­தக் கட­னு­தவி மூலம் சென்னை மாந­க­ரம் பசு­மை­யான, வாழ்­வ­தற்கு உகந்த, போட்­டித்­தன்மைமிக்க, பரு­வ­நிலை மாற்­றத்­தால் எவ்­வித பாதிப்­புக்­கும் ஆளா­காத நக­ர­மாக உரு­மாற்­றம் பெறும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டா்­பாக உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "ஏறக்­கு­றைய ஒரு கோடி மக்­களு­டன் இந்­தி­யா­வில் நான்­கா­வது அதிக மக்­கள்­தொகை கொண்ட மாந­க­ர­மாக சென்னை உள்­ளது.

"மாநி­லத்­தின் பொரு­ளா­தார மைய­மாக விளங்­கும் சென்னை நக­ரம் இயற்­கைப் பேரிடா், பருவ நிலை மாற்­றத்­தால் அதிக பாதிப் புக்கு ஆளா­கும் சூழல் உள்­ளது.

"இந்நிலையில், உலக வங்கி வழங்­கும் கடனுதவி மூலம் நிறு­வனங்­களும் நக­ரின் சேவைத் துறை­க­ளின் நிதி நிலை­மை­யும் மேம்­ப­டுத்தப்படும்.

"கல்வி நிலை­யங்­கள், சுகா­தா­ரச் சேவை மையங்­கள், குடி­நீர் விநி யோகம், கழி­வு­நீர் அகற்­று­தல், போக்கு­வ­ரத்து, சுகா­தார வச­தி களை அதி­க­ரிக்­க­வும் இந்த கடன் ெதாகை உத­வி­யாக இருக்­கும்," என்று கூறப்­பட்­டுள்­ளது.

உலக வங்கியின் செயல் இயக்கு நர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக வும் இவ்வங்கி நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!