மகாத்மா காந்தி பிறந்தநாள்: அதிபர், பிரதமர், முதல்வர் மரியாதை

புது­டெல்லி: தேசப்­பிதா மகாத்மா காந்­தி­யின் 153வது பிறந்­த­நாள் நேற்று இந்­தியா முழு­வ­தும் கொண்­டா­டப்­பட்­டது.

டெல்லி ராஜ்­காட்­டில் உள்ள காந்தி நினை­வி­டத்­தில் அதி­பர் ராம்­நாத் கோவிந்த், பிர­த­மர் நரேந்திர மோடி, காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் சோனியா காந்தி உள்­ளிட்­டோர் மலர் வளை­யம் வைத்து மரி­யாதை செலுத்­தி­னர்.

இதே­போல் சென்னை, காம­ரா­ஜர் சாலை­யில் மலர்­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த காந்தி உரு­வப்­ப­டத்­திற்கு தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி, முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உள்­ளிட்­டோர் மலர்களைத் தூவி மரியாதை செய்தனர்.

இதுகுறித்து, பிர­த­மர் மோடி தனது டுவிட்­டர் பக்கத்தில், "தேசத் தந்­தைக்கு எனது வணக்­கங்­கள். பாபு­வின் வாழ்க்கை யும் அவ­ரது இலட்­சி­யங்­களும் நாட்­டின் ஒவ்­வொரு தலை­முறையின­ரை­யும் கட­மை­யின் பாதை­யில் நடக்க ஊக்­கு­விக்­கும்," எனப் பதி­விட்­டுள்­ளார்.

"அகிம்சை, சகோ­த­ரத்­து­வத்தை சமு­தா­யத்­துக்கு கற்­பித்­த­வர் மகாத்மா காந்தி­ ய­டி­கள். அவர் காட்­டிய நல்­வ­ழி­யில் நாமும் நாடும் நடை­போ­டு­வதே இன்­றைக்­கும் என்­றைக்­கும் தேவை­யா­கும்," என்று முதல்­வர் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி (வலது), முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்: டுவிட்டர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!