வீட்டு மனை கேட்ட கல்லூரி மாணவருக்கு வீடு கட்டிக் கொடுக்க தஞ்சை ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர்: வீட்டுமனை வழங்கும்படி 'வாட்ஸ் ஆப்'பில் மனு அனுப்பிய கல்லுாரி மாணவர் சதீஷ்குமாருக்கு வீடு கட்டிக் கொடுக்குமாறு தஞ்சை ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

"சொந்த வீடு இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், அதிகாரிகள் காட்டிய இரண்டு இடங்களில் ஓர் இடத்தை தேர்வு செய்துள்ளோம்.

"அதில், வீடு கட்டிக் கொடுக்கு மாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இனி வீடின்றி என் பெற்றோர் அவமானப்பட மாட்டார்கள்," என்று மாணவர் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கீழப்பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்ற கூலித் தொழிலாளி சொந்த வீடு இல்லாமல் தனது மனைவி, இரு மகள்கள், இரு மகன்களுடன் ஒக்கநாடு கீழையூரில் உறவினர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்நிலையில், அரசு கல்லுாரியில் படித்து வரும் சதீஷ்குமார், 18, வீட்டு மனை கேட்டு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு 'வாட்ஸ் ஆப்'பில் மனு அனுப்பினார். அதில், "சொந்த வீடு இல்லாததால் வீட்டுமனை கொடுத்து, அதில் வீடு கட்டித்தர ஏற்பாடு செய்தால் போதும். இலவசமாக கேட்கல. இன்னைக்கு எனக்கு இதை செய்தால், நாளைக்கு நான் படித்து, என்னைப் போன்ற ஒருவருக்காவது வீடு கட்டித் தருவேன்," என, தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உடனே சதீஷ்குமாரை நேரில் வரவழைத்து விசாரித்த ஆட்சியர், அவருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான நட வடிக்கை எடுக்குமாறு, வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!