தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் அனல்: முழுவீச்சில் கட்சிகள்

சென்னை: தமி­ழ­கத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடந்து முடிந்து ஐந்து மாத காலம் ஆகி இருக்­கும் நிலை­யில், அடுத்த அர­சி­யல் அனல் அடிக்­கத் தொடங்கி­விட்­டது.

மாநி­லத்­தின் ஒன்­பது மாவட்டங்­களில் இந்த மாதம் 6ஆம் தேதி­யும் 9ஆம் தேதி­யும் இரண்டு கட்டங்­களாக உள்­ளாட்­சித் தேர்­தல் நடக்­கிறது. முடிவுகள் இம்­மா­தம் 12ஆம் தேதி வெளி­வ­ரும்.

காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, வேலூர், ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர், விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி, திரு­நெல்­வேலி, தென்­காசி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு உட்­பட்ட ஊரக, உள்­ளாட்சி அமைப்­பு­களில் பல்­வேறு பத­வி­க­ளைக் கைப்­பற்ற மொத்­தம் 79,433 பேர் வேட்­பா­ளர்­களாக களம் இறங்­கு­கி­றார்­கள்.

வழக்­கம்­போல் திமுக தலை­மை யி­லான அணிக்­கும் அதி­முக தலைமை­யி­லான அணிக்­கும் இடை யில் கடும் போட்டி இருக்­கும் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

"இந்த இரண்டு அணி­க­ளுக்­குமே வெற்றி தேவைப்­ப­டு­கிறது.

"திமுக அணி கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தனக்­குக் கிடைத்த பெரும் வெற்­றியை உறு­திப்­ப­டுத்திக் கொண்டு எதிர்த்­த­ரப்­புக்கு மேலும் அச்­சத்­தைக் கிளப்­பி­வி­டும் அளவுக்குப் பெரிய அள­வில் முயற்சி­களை முடுக்­கி­விட்­டுள்­ளது.

"அதே­வே­ளை­யில், பத்து ஆண்டு காலம் நீடித்து வந்த ஆட்சி­யைத் திமு­க­வி­டம் பறி­கொ­டுத்து விட்ட நிலை­யில், அந்த இழப்பை ஈடு­செய்ய இதுவே சரி­யான தருணம் என்று அதி­முக அணி நம்­பு­கிறது," என்று கவ­னிப்­பாளர்கள் தெரி­விக்­கி­றார்­கள்.

"பொது­வாக உள்­ளாட்­சித் தேர்தல் ஆளும் கட்­சிக்கே அனு­கூ­ல­மாக இருக்­கும்.

"அது­வும் அதி­முக தன் அணி­யில் இருந்த வலு­வான பாம­கவை இழந்­து­விட்­டது. ஆகை­யால் கூட்டிக் கழித்­துப் பார்க்­கை­யில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதி­க­மா­கத் தெரி­கிறது," என்று தாங்­கள் நம்­பு­வ­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

இத­னி­டையே, கடந்த ஏப்­ரல் மாதம் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­தலில் தான் 114.14 கோடி ரூபாய் செல­விட்­ட­தாக தேர்­தல் ஆணை­யத்­தி­டம் தாக்­கல் செய்த அறிக்­கை­யில் திமுக தெரி­வித்­துள்­ளது. அதேவேளை­யில், அதி­முக 57.33 கோடி ரூபாய் செல­விட்­ட­தா­க­வும் பாமக ரூபாய் 30 லட்­சம் செலவு செய்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

பல மாநி­லங்­க­ளி­லும் நடந்த தேர்­த­லின்­போது அர­சி­யல் கட்சிகள் செல­விட்ட தொகை பற்­றிய அறிக் கைகளைத் தேர்­தல் ஆணை­யம் வெளி­யிட்­டது. மேற்கு வங்­கா­ளத்­தில் வெற்­றி­பெற்ற திரி­ணா­மூல் காங்­கிரஸ் கட்­சி­தான் ஆக அதி­க­மாக ரூ.154.28 கோடி செல­விட்­டது. அடுத்த இடத்­தில் திமுக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!