தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேலானோரிடம் அதிக உயிரிழப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் தொடக்­கத் தில் ஆர்­வம் காட்­டிய 60 வய­துக்கு மேலா­னோ­ரி­டம் தற்­போது ஆர்­வம் குறைந்து, தயக்கம் காட்டுவதாக சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

60 வய­துக்கு மேலானோருக்கு மார்ச் ஒன்­றாம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இது­வரை ஏழு மாதங்­கள் நிறை வடைந்­துள்ள நிலை­யில், எதிர்­பார்த்த அள­வுக்கு முதி­ய­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

தமிழ்­நாட்­டில் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் 51% பேர் முதல் தவணை தடுப்­பூசி போட்­டுக் கொண்டு உள்­ள­தா­க­வும் 18% பேர் மட்­டுமே இரு தவணை தடுப்­பூசி யையும் போட்­டுக்கொண்­டுள்­ள­தா­க­வும் சுகா­தா­ரத் துறை கூறி­யுள்­ளது.

தடுப்­பூசி போடா­மல் அதி­க­மான மூத்­தோர் இறப்­புக்கு ஆளாகி உள்­ள­தா­க­வும் கூறப்படுகிறது.

செப்­டம்­டர் 25ஆம் தேதி முதல் 149 பேர் இறந்­துள்­ள­தா­க­வும் இவர் களில் 108 பேர் 60 வய­துக்கு மேல் உள்­ள­வர்­கள் என்றும் 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' ஊட­கம் குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வரை­ மாநி­லத்­தில் 34,878 பேர் உயி­ரி­ழந்­த­னர். இவர்­களில் 58% இறப்­பு­ 60 வய­துக்கு மேற்­பட்ட பிரி­வி­னரிடமே ஏற்­பட்டுள்­ளது. 35% இறப்­பு 41 முதல் 60 வயது வரை­ உள்ளவர்க­ளி­ட­மும் 7% உயி­ரி­ழப்பு­ 21 முதல் 40 வயது வரை உள்­ள­வர்களி­ட­மும் ஏற்­பட்­டுள்­ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!