தமிழகத்தில் ஒரேநாளில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

சென்னை: மாநி­லம் முழு­வ­தும் நேற்று நான்­கா­வது முறை­யாக மாபெ­ரும் கொவிட்-19 தடுப்­பூசி முகாம் நடை­பெற்­றது.

ஏறக்­கு­றைய 20,000 இடங்­களில் நடத்­தப்­பட்ட இந்த முகாம்­கள் மூலம் 25 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யித்து உள்­ள­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

சென்­னை­யில் மட்டும் 1,600 இடங்­களில் தடுப்­பூசி போடும் பணி தொடர்ந்­தது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின் மூன்­றாம் அலை அச்­சத்­தைத் தவிர்க்­க­வும் அன்­றாட கிருமிப் பாதிப்­பில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்­க­வும் கடந்த சில வாரங்­க­ளா­கவே ஞாயி­று­தோ­றும் தடுப்­பூசி போடும் பணியை அரசு தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறது.

இது­போல் நேற்­றும் நடந்த நான்­காம் கட்ட முகா­மில் 18 வய­துக்கு மேலான ஏராளமான மக்க ளுக்கு காலை 7 முதல் இரவு 7 மணி வரை தடுப்­பூசி போடப்­பட்­டது.

மாநி­லத்­தில் கடந்த செப்­டம்பா் 12ஆம் தேதி 28.91 லட்­சம் பேருக்­கும் 19ஆம் தேதி 16.41 லட்­சம் பேருக்­கும் 26ஆம் தேதி 24.85 லட்­சம் பேருக்­கும் ஒரே நாளில் பெரிய அள­வில் தடுப்­பூசி போடப்­பட்­டது.

இதைத்­தொ­டர்ந்து, ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள், அரசு மருத்­து­வ­ம­னை­கள், சத்­து­ணவு மையங்­கள், பள்­ளி­கள், ரயில் நிலை­யங்­கள், பூங்­காக்­கள் உள்­ளிட்ட இடங்­களில் நேற்று நடத்­தப்­பட்ட தடுப்­பூசி முகாம்­களில் மக்­கள் சாரை சாரை­யாக வந்து ஆர்வத்துடன் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­னர்.

அக்­டோ­பர் இறு­திக்­குள் ஒன்­றரை கோடி மக்­க­ளுக்கு முதல் தவணை தடுப்­பூ­சி­யைப் போட சுகா­தார அதி­கா­ரி­கள் இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் கடந்த இரு மாதங்­களில் மட்­டும் தடுப்­பூசி போடாத 87% பேர் அதா­வது 1,419 பேர் கொரோ­னா­வுக்கு பலி­யாகி உள்­ள­தாக பொது சுகா­தா­ரத்­துறை இயக்­கு­நர் டாக்­டர் செல்­வ­வி­நா­ய­கம் தெரி­வித்­துள்­ளார்.

அவர் வெளி­யிட்­டுள்ள காணொ ளிப் பதி­வில், "மர­ணத்தை தடுப்­பூசி வெகு­வா­கத் தடுக்­கிறது. கடந்த இரண்டு மாதத்­தில் மட்­டும் 1,626 பேர் கிருமி பாதிப்­பால் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இவர்­களில் 1,419 பேர் தடுப்­பூசி போட்டுக்கொள்­ளா­த­வர்­கள். இவர்­கள் தடுப்­பூசி போட்­டி­ருந்­தால் இறப்­பைத் தவிர்த்­தி­ருக்க முடி­யும். அதே­போல முதல் தவணை தடுப்­பூசி போட்­ட­வர்­களில் 9% பேர் மட்­டுமே இறந்­துள்­ள­னர்.

"இரண்டு தவணை தடுப்­பூசியும் போட்டுக்கொண்­ட­வர்­களில் நான்கு விழுக்காட்டினர் மட்­டுமே உயி­ரி­ழந்­து உள்­ள­னர்," என்று செல்­வ­வி­நா­ய­கம் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!