ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வன்முறையாக மாறிய போராட்டம்; விவசாயிகள் உட்பட 9 பேர் பலி

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பில் காவல்­து­றைக்­கும் விவ­சா­யி­க­ளுக்­கும் இடையே உடன்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பாக ஓய்வு பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­பதி விசா­ரணை நடத்­து­வார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வன்­மு­றை­யில் பலி­யா­ன விவ­சா­யி­கள் குடும்­பத்­துக்கு ரூ.45 லட்­ச­மும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு ரூ.10 லட்­ச­மும் வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு அர­சுப்­பணி வழங்­கப்­படும் என்­றும் அடுத்த எட்டு நாள்­க­ளுக்­குள் குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அங்கு நிகழ்ந்த விபத்து, வன்­மு­றை­யில் விவ­சா­யி­கள் உட்­பட ஒன்­பது பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். பலர் படு­கா­யம் அடைந்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்ள லக்­கிம்­பூர் கெரி பகு­தி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க மத்­திய இணை அமைச்­சர் அஜய் மிஸ்­ரா­வும் உத்­த­ரப் பிர­தேச துணை முதல்­வர் கேசவ் பிர­சாத் மவு­ரி­யா­வும் சென்­ற­போது அப்­ப­குதி விவ­சா­யி­கள் கறுப்­புக்­கொடி காட்டி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இத­னால் பாஜக தொண்­டர்­க­ளுக்­கும் விவ­சா­யி­க­ளுக்­கும் இடையே மோதல் மூண்­டது. அப்­போது மத்­திய அமைச்­ச­ரைப் பின்­தொ­டர்ந்து வந்த வாக­னம் ஒன்று, போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த விவ­சா­யி­கள் கூட்­டத்­துக்­குள் புகுந்­தது.

இதில் இரண்டு விவ­சா­யி­கள் சம்­பவ இடத்­தி­லேயே பலி­யா­கி­னர். பலர் காய­ம­டைந்­த­னர். இத­னால் ஆவே­சம் அடைந்த விவ­சா­யி­கள் பாஜ­க­வி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர். பாஜக தொண்­டர்­களும் தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­தால் வன்­முறை வெடித்­தது.

நான்கு பேர் பலி­யான தக­வல் பர­வி­யதை அடுத்து, உத்­த­ரப் பிர­தே­சம் முழு­வ­தும் ஆங்­காங்கே விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

ராஜஸ்­தான், பஞ்­சாப், ஹரி­யானா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் விவ­சா­யி­கள் மேலும் தீவி­ரப் போராட்­டத்­தில் ஈடு­ப­டப்போவ­தாக அறி­வித்­துள்­ள­னர்.

லக்­கிம்­பூர் கெரி மாவட்­டத்­தில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இணைய சேவை­கள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து சமாஜ்­வாதி கட்­சி­யின் தேசி­யத் தலை­வர் அகி­லேஷ் யாதவ் லக்­னோ­வில் உள்ள தன் வீட்­டின் முன் தர்ணா போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.

பின்­னர் வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளின் குடும்­பத்­தா­ரைச் சந்­திக்க தாம் லக்­கிம்­பூர் செல்ல இருப்­ப­தாக அறி­வித்த நிலை­யில், போலி­சார் அவ­ரைத் தடுத்து நிறுத்­தி­னர்.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஆங்­கி­லே­யர் ஆட்­சி­யில் நடந்­த­தை­விட நாட்­டில் அதிக கொடு­மை­கள் நடப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­னார்.

"விவ­சா­யி­கள் மீதான தாக்­கு­தல் ஹிட்­லர் செய்­ததை விடக் கொடு­மை­யா­னது. மத்­திய உள்­துறை இணை அமைச்­சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்­டும்," என அகி­லேஷ் யாதவ் கூறி­ய­தாக 'தமிழ் இந்து' ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்­நி­லை­யில் மத்­திய அமைச்­சர் அஜய் மிஸ்­ரா­வின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்­ளிட்ட 14 பேர் மீது கொலை வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, புதிய வேளாண் சட்­டங்­கள் நிறுத்திவைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தொடர் போராட்­டங்­கள் நடத்­தப்­ப­டு­வது ஏன்? என விவ­சாய அமைப்­பு­க­ளுக்கு உச்ச நீதி­மன்­றம் கேள்வி எழுப்பி உள்­ளது.

விவ­சா­யி­கள் தொடர்­பான ஒரு வழக்­கின் விசா­ர­ணை­யின்­போது, தற்போது நடை­மு­றை­யில் இல்­லாத சட்­டங்­களை முன்­வைத்து எதற்­காகப் போராட வேண்­டும்? என்றும் உச்ச நீதிமன்ற நீதி­பதி­கள் கேள்வி எழுப்­பி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!