கோவில் சிலைகளை ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் இந்து சமய அற­நி­லை­யத் துறை கட்­டுப்­பாட்­டின் கீழ் உள்ள கோவில்­களில் சாமி சிலை­கள் சரி­யாக உள்­ள­னவா என்­பதை ஆய்வு செய்ய சிறப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தொல்­லி­யல் துறை அமைத்­துள்ள இந்த 12 குழுக்­களும் அற­நி­லை­யத்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள 36 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட கோவில்­களில் ஆய்வு மேற்­கொள்­ளும்.

சென்னை உயர் நீதி­மன்­றம் இவ்­வாறு குழுக்­கள் அமைக்க வேண்­டும் என அண்­மை­யில் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

அதை ஏற்று தொல்­லி­யல் துறை செயல்­பட்­டுள்­ள­தாக அற­நி­லை­யத்­துறை ஆணை­யர் கும­ர­கு­ரு­ப­ரன் தெரி­வித்­துள்­ளார்.

மொத்­தம் 28 அலு­வ­லர்­க­ளைக் கொண்ட 12 குழுக்­க­ளுக்கு மாவட்ட அள­வி­லான அதி­கா­ரி­கள் உரிய ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டும் என அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

கடந்த பல ஆண்­டு­களில் தமி­ழ­கத்­தில் உள்ள பல்­வேறு கோவில்­களில் இருந்து சாமி சிலை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. அவற்­றில் சில சிலை­கள் வெளி­நா­டு­க­ளுக்கு கடத்­தப்­பட்­டது தெரிய வந்­துள்­ளது. இதை­ய­டுத்து, அவற்றை மீட்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை காவல்­துறை மேற்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!