இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்களிப்பு

விழுப்­பு­ரம்: உள்­ளாட்­சித் தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் நான்கு நாட்­களுக்கு பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அளிக்­கும்­படி பள்ளிக் கல்­வித் துறைக்கு அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­களும் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

பள்­ளி­கள் தேர்­தல் வாக்­குச் சாவடி மையங்­க­ளாக செயல்­பட உள்­ள­தா­ல் நான்கு நாள் விடு­முறை விடப்படுவதாக ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமி­ழ­கத்­தின் காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, வேலூா், ராணிப்­பேட்டை, திருப்­பத்தூா், விழுப்­பு­ரம், கள்­ளக்­குறிச்சி, திரு­நெல்­வேலி, தென்­காசி ஆகிய ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்­கான ஊரக உள்­ளாட்­சித் தோ்தல் இரு கட்­டங்­க­ளாக இன்­றும் அக்­டோ­பர் 9ஆம் தேதி­யும் நடை­பெற உள்­ளன.

இன்று இத்தேர்­தல் நடை­பெ­றும் மாவட்­டங்­களில் மதுக்­க­டை­களை மூடும்படி ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், வாக்களிப்பு நடை­பெ­றும் அனைத்து வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும் கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளைப் பொருத்­தும்படி மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு மாநில தேர்­தல் ஆணை­யர் பழனிகுமார் ேநற்று அறி­வு­றுத்தி இருந்தார்.

உயர் நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வுப்­படி அனைத்து வாக்­குச்­சா­வ­டி­க­ள், வாக்கு எண்­ணும் மையங்­க­ளில் கண்­கா­ணிப்புக் கேம­ராக்­க­ளைப் பொருத்­த­வேண்­டும் என்றார் அவர்.

தேர்­தல் அலு­வ­லர்­களும் போலிஸ் உயர் அதி­கா­ரி­களும் கவ­ன­மாகச் செயல்­பட்டு அமை­தி­யான முறை­யில் தேர்­தல் நடை­பெ­று­வதை உறு­தி­செய்யவேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்டார்.

இத்­தேர்­த­லில் பெரும்­பான்­மை­யான இடங்­களைக் கைப்­பற்றும் இலக்குடன் ஆளும்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுகவினர் தேர்­தல் களத்­தில் மல்­லுக்­கட்டி வந்தனர். இதே­போல் பாஜக, பாமக, காங்­கி­ரஸ், தேமுதிக, அமமுக, கம்­யூ­னிஸ்டு­கள், விடு­தலை சிறுத்­தை­கள் உள்­ளிட்ட கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­களும் சுயேட்சை வேட்­பா­ளர்­களும் தாங்­கள் வெற்றிபெற்­றால் மக்­க­ளுக்குத் தேவை­யான அடிப்­படை பிரச்­சி­னை­களை நிறை­வேற்­றித்­தர பாடு­ப­டு­வோம் என்று கூறி கடந்த 10 நாட்களாக மக்­க­ளி­டம் வாக்கு சேகரித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!