அமைதியாக நடைபெற்ற ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்

27,002 பதவியிடங்களைக் கைப்பற்ற 98,151 பேர் கடும் போட்டி

சென்னை: தமி­ழ­கத்­தில் ஒன்­பது மாவட்­டங்­களில் உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான முதற்­கட்ட வாக்­குப்­ப­திவு நேற்று நடை­பெற்­றது. நேற்று மாலை மூன்று மணி நில­வ­ரப்­படி, 52.40% வாக்­கு­கள் பதி­வா­ன­தாக மாநி­லத் தேர்­தல் ஆணை­யர் தெரி­வித்­துள்­ளார்.

காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, வேலூர், திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி, திரு­நெல்­வேலி, தென்­காசி ஆகிய ஒன்­பது மாவட்­டங்­களில் இந்­தத் தேர்­தல் நடை­பெற்­றது. முதற்­கட்ட­மாக நேற்­றும் அடுத்து 9ஆம் தேதி­யும் வாக்­குப்­ப­திவு நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஒன்­பது மாவட்ட உள்­ளாட்சி அமைப்­பு­களில் 27,002 பதவி இடங்­கள் உள்­ளன. அவற்­றுக்கு பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள், அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் சுயேச்­சை­களும் என மொத்­தம் 98,151 பேர் வேட்பு மனுக்­கள் தாக்­கல் செய்­துள்­ள­னர்.

இறுதி வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­ட­போது அனைத்து வேட்­பா­ளர்­க­ளுக்­கும் சின்­னங்­கள் ஒதுக்­கப்­பட்­டன. இம்­முறை 3,346 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யின்றித் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­னர். எனவே, நேற்­றைய வாக்­குப்­ப­தி­வின்­போது, 80,819 வேட்­பா­ளர்­கள் மட்­டுமே போட்­டி­யில் இருந்­த­னர்.

தேர்­தல் நடை­பெற்ற ஒன்­பது மாவட்­டங்­களில் 39 ஊராட்சி ஒன்­றி­யங்­க­ளுக்கு உட்­பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்­பி­னர் பத­வி­கள் உள்­ளன. மேலும் 755 ஒன்­றிய வார்டு உறுப்­பி­னர் பத­வி­களும் 1,577 கிராம ஊராட்­சித் தலை­வர் பத­வி­களும் உள்­ள­தாக தேர்­தல் ஆணைய வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. மேலும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்­பி­னர் பத­வி­யைக் கைப்­பற்­ற­வும் ஏரா­ள­மா­னோர் போட்­டி­யிட்­ட­னர்.

நேற்று மட்­டும் 14,662 பத­வி­யி­டங்­க­ளுக்கு வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் 7,921 வாக்­குச்­சா­வ­டி­கள் அமைக்­கப்­பட்­டன. முதல்­கட்ட தேர்­த­லில் சுமார் 41 லட்­சம் பேர் வாக்­க­ளிக்க உள்­ள­னர்.

ஒவ்­வொரு வாக்­கா­ள­ரும் கிராம ஊராட்சி உறுப்­பி­னர், ஊராட்­சித் தலை­வர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்­சி­லர், ஊராட்சி ஒன்­றிய வார்டு கவுன்­சி­லர் என நான்கு பத­விக்கு உரி­ய­வர்­க­ளைத் தேர்வு செய்ய வாக்­க­ளித்­த­னர்.

உள்­ளாட்­சித் தேர்­த­லில் சில கட்­சி­கள் கூட்­டணி அமைப்­ப­தில் பெரி­தாக ஆர்­வம் காட்­ட­வில்லை.

பாமக, மக்­கள் நீதி மய்­யம், நாம் தமி­ழர் கட்சி, அம­முக, தேமு­திக ஆகிய கட்­சி­கள் இம்­முறை தனித்­துக் களம் காண்­கின்­றன. இத­னால், ஏழு முனைப் போட்டி நில­வு­கிறது.

சில இடங்­களில் செல்­வாக்­குப் பெற்ற உள்­ளூர் பிர­மு­கர்­கள் சுயேச்­சை­யா­கக் கள­மி­றங்கி உள்­ள­னர். திமுக, அதி­முக கூட்­ட­ணி­யில் சில கட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த பத்து நாள்­க­ளாக ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் வேட்­பா­ளர்­கள் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வந்­த­னர். நேற்று வாக்குப்­ப­திவு நடை­பெற்­றது. சில பகு­தி­களில் மழை பெய்த போதும் மக்­கள் ஆர்­வத்­து­டன் வாக்­க­ளித்­த­னர். நேற்று மாலை மூன்று மணி நில­வ­ரப்­படி, 52.40% வாக்­கு­கள் பதி­வா­ன­தா­க­வும் வாக்கு எண்­ணிக்கை 12ஆம் தேதி நடை­பெ­றும் என்­றும் மாநி­லத் தேர்­தல் ஆணை­யர் பழ­னி­கு­மார் அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!