எதிர்வரும் 10ஆம் தேதி ஐந்தாவது தடுப்பூசி முகாம்

சென்னை: தமி­ழ­கத்­தில் தொற்­றுப் ப­ர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் எதிர்­வ­ரும் 10ஆம் தேதி, மாநி­லம் தழு­விய அள­வில் ஐந்­தா­வது தடுப்­பூசி முகாம் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை மாநி­லம் முழு­வ­தும் சுமார் முப்­ப­தா­யி­ரம் இடங்­களில் தடுப்­பூசி போடும் மையங்­கள் அமைக்­கப்­படும் என சுகா­தார அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், அக்­டோ­பர் மாத இறு­திக்­குள் தமி­ழ­கத்­தில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்குத் தடுப்­பூசி போட வேண்­டும் எனும் இலக்­கு­டன் அரசு செயல்­படுகிறது என்றார்.

இந்த இலக்கை அடைய தடுப்­பூசி முகாம்­கள் பெரி­தும் கைகொடுப்­ப­தா­க குறிப்பிட்ட அவர், தாதியர், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான பங்களிப்பால் தான் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதாகப் பாராட்டினாா்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,449 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. தொடர்ந்து 12 நாள்­க­ளாக தொற்­றுப் பாதிப்பு இறங்­கு­மு­க­மாக உள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் கொரோனா வழி­காட்­டும் நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­த­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. சென்­னை­யில் மட்­டும் முகக்கவ­சம் அணி­யாத 1,844 பேர் மீது வழக்கு பதி­வாகி உள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் 380 இடங்­களில் வாகன சோதனை நடை­பெ­று­கிறது என்­றும் திங்­கட்­கி­ழ­மை­யன்று பொது­மு­டக்க மீறல் தொடா்பாக 47 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

217 வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்ட நிலை­யில், தனி நபா் இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கா­த­வா்­கள் மீது ஆறு வழக்­கு­களும் பதிவு செய்­யப்­பட்­டன.

இதற்­கி­டையே மன­ந­லம் பாதிக்­கப்­பட்டு சென்னை நக­ரச் சாலை­களில் சுற்­றித் திரி­ப­வர்­க­ளைக் கண்­ட­றிந்து கொரோனா தடுப்­பூசி செலுத்த வேண்­டும் என தமி­ழக அர­சுக்கு உயர் நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!