விதி மீறிய 3,000 ஆலைகள் மூடப்பட்டன

சென்னை:

தமிழகத்தில் வரும் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாகத் தடை செய்யப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் நேற்று கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள் களுக்கும் அரசு தடை விதித்துள்ளது.

"மாநிலம் முழுவதும் அரசின் விதிமுறைகளை மீறும் வகையில் செயல்பட்ட 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

"சட்டவிரோத சாயப்பட்டறைக் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும்," என தெரிவித்த அமைச்சர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

பிளாஸ்டிக் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கும் உடல் நலத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதால் மக்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!