‘சர்க்கார்’ பாணியில் வாக்களித்த பெண்

வாலா­ஜா­பாத்: 'சர்க்­கார்' படத்­தில் வரு­வது போல உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை யாரோ போட்­டு­விட்­டுச் சென்றதை அடுத்து, இப்பிரச்­சி­னையை அப்­படியே விட்­டு­விட்­டுச் செல்­லா­மல் கைக்குழந்­தை­யு­டன் போராடி தனது வாக்கை முறைப்­படி போட்­டு­விட்­டுச் சென்ற பார்­வ­தியை (படம்) கிராம மக்­கள் பாராட்டி வரு­கின்­ற­னர்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், வாலாஜா­ பாத், சிங்­கா­டி­வாக்­கம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் பாலகிருஷ்­ணன். இவ­ரது மகள் பார்­வதி, 30. இவர் உத்­தி­ர­மே­ரூர் பகு­தி­யைச் சேர்ந்த குமாரவேல் என்­ப­வரைத் திரு­ம­ணம் செய்து கொண்டு, ஆறு மாத கைக்­கு­ழந்தையுடன் வசித்து வரு­கி­றார். பார்­வதி தனது வாக்­கா­ளர் அடை­யாள அட்­டையை பிறந்த ஊரான சிங்­காடி வாக்­கத்­தில் இருந்து உத்­தி­ர­மே­ரூர் பகு­திக்கு மாற்­றா­மல் இருந்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் சிங்­காடிவாக்­கத்­தில் உள்ள தனது வாக்கை செலுத்­து­வ­தற்­காக கைக்­கு­ழந்­தை­யு­டன் வாக்­குச்­சா­வ­டிக்கு அவர் வந்­த­போது, பார்­வ­திக்கு முன்பே அவ­ரது வாக்கை வேறு யாரோ ஒரு­வர் கள்ள வாக்­காக பதிவு செய்துவிட்­டுச் சென்­று­விட்­டார் என்­பது தெரி­ய­வந்­தது.

இதை அறிந்த பார்­வதி அதிர்ச்சி அடைந்து வாக்­குப்­ப­திவு மைய அலு­வ­ல­ரி­ட­மும் வேட்­பா­ளர்­க­ளின் முக­வர்­க­ளி­ட­மும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார். அதைத்­தொ­டர்ந்து பார்­வதி தேர்­தல் நடத்­தும் அலு­வ­ல­ரி­டம் புகார் தெரி­வித்­தார்.

இதையடுத்து, வாக்­குப்­ப­திவு மையத்­திற்கு வந்த வரு­வாய்த்­துறை அதி­கா­ரி­கள் பார்­வ­தி­யி­டம் பேச்சு வார்த்­தை­யில் ஈடு­பட்டு, சர்க்­கார் படத்­தில் விஜய் வாக்கை செலுத்தியதைப் போல 49 பி படி­வத்தை பார்­வ­திக்கு வழங்கி 'சேலஞ்ச்' வாக்கை பதிவு செய்யவைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!