குடத்திற்குள் சிக்கிய நாயின் தலையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி: சில்­வர் குடத்­தின் அடிப்­பகு­தி­யில் இருந்த நீரைக் குடிப்­ப­தற்­கா­க நாய் ஒன்று தனது தலை யைக் குடத்துக்குள் விட்ட நிலை யில், அதன்பிறகு தனது தலையை வெளியே எடுக்­க­மு­டி­யாமல் பெரும் அவ­திப்­பட்டது. தீய­ணைப்­புத் துறை­யி­னரின் முயற்சியால் மீட்கப்பட்டது.

திருச்சி மாவட்­டம், மணப்­பாறை அருகே உள்ள சீகம்­பட்­டி­யில் சாலை யோரம் சுற்­றித்திரிந்த நாய் ஒன்று பழைய போத்­தல்­க­ளைக் கழுவி சுத்தம் செய்யும் நிறு­வ­னத்­தின் முன்பு வைக்கப்பட்டிருந்த சில்­வர் குடத்­திற்­குள் தண்­ணீர் குடிப்­ப­தற்­கா­கத் தலையை விட்­டுள்­ளது.

அதன்­பி­றகு அத­னால் தலையை வெளியே எடுக்­க­மு­டி­யா­மல் குடத்­து­டன் அங்­கும் இங்­கு­மாக கண் மூடித்தனமாக ஓடி­யுள்­ளது.

இது­பற்றி அந்தப் பகுதி மக்­கள் மணப்­பாறை தீய­ணைப்­புத் துறை­யி­ன­ருக்குத் தக­வல் கொடுத்­த­னர். இதை­ய­டுத்து, அங்கு வந்த தீய­ணைப்புத் துறை­யி­னர் சில்­வர் குடத்தை லாவ­க­மாக வெட்டி, குடத்­தில் சிக்­கிய நாயின் தலையை வெளி­யே மீட்­ட­னர்.

இந்தச் சம்­ப­வத்­தால் மிரண்டு போயி­ருந்த நாய், தன்னை விடு­வித்­த­தும் மின்­னல் வேகத்­தில் அங்­கி­ருந்து ஓடி­ மறைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!