70% தமிழக மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 70% பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான நோய் எதிர்ப்­பு சக்தி அதி­க­ரித்­துள்­ள­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

"இது­வரை 5 கோடியே ஒரு லட்­சத்து 30 ஆயி­ரத்து 323 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

"இவர்­களில் 64% பேருக்கு முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 22% பேருக்கு இரண்­டா­வது தவணை தடுப்­பூ­சி­யும் போடப்­பட்­டுள்­ளது," என்று அவர் ேமலும் கூறி­னார்.

சென்னை தேனாம்­பேட்­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர், "மாநி­லம் முழு­வ­தும் பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் இருந்­தும் மாதி­ரி­கள் சேக­ரிக்­கப்­பட்டு நோய் எதிர்ப்­பு சக்தி குறித்து சோதிக்­கப் பட்­டது.

"தமி­ழ­கத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் விரு­து­ந­கர் 88%, தென்­காசி 83%, சென்னை 82%, மதுரை 79%, தேனியில் 75% பேர் என பெரும்­பா­லான மாவட்­டங்­களில் 70% பேருக்­கு நோய் எதிர்ப்­பு சக்தி அதி­க­ரித்­துள்­ளது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

"இருப்­பி­னும் கரூர், நீல­கிரி, அரி­ய­லூர், பெரம்­ப­லூர் ஆகிய நான்கு மாவட்­டங்­களில் மட்­டும் இந்த எதிர்ப்­பு சக்தி 60%க்கும் குறை­வா­கவே இருப்­பதும் தெரிய வந்துள்ளது.

"இதைத்­தொ­டர்ந்து, தடுப்­பூசி போடு­வ­தில் இந்த மாவட்ட மக்­கள் பக்­கம் அதிக கவனம் செலுத்­தும்­படி சுகா­தார அதி­கா­ரி­கள் கேட்­டுக்கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்," என்று அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன் சொன்­ன­தாக 'பொதிகை' காெணாளிச் செய்தி ெதரி­வித்­துள்­ளது.

"தமி­ழ­கத்­தில் 50 லட்­சத்து 12 ஆயி­ரம் தடுப்­பூசி குப்­பி­கள் கையி­ருப்­பில் உள்­ளன. நாளை நடை­ பெ­றும் ஐந்­தாம் கட்ட முகா­மில் 30,000 பேருக்­குத் தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது," எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்­கிை­டயே, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோ­ருக்கு முதல் பரி­சாக துணி துவைக்­கும் இயந்­தி­ரம், இரண்­டாம் பரி­சாக 'கிரைண்­டர்', மூன்­றாம் பரி­சாக 'மிக்ஸி', நான்­காம் பரி­சாக 25 பேருக்கு சமை­யல் பானை­களும் குலுக்­கல் முறை­யில் வழங்­கப்­பட உள்­ள­தாக கரூர் மாவட்ட ஆட்­சி­யர் பிரபு சங்­கர் அறி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!