கோயில்களைத் திறக்காவிடில் சிறை செல்வோம் என முழங்கிய 900 பாஜகவினர் மீது வழக்கு

மதுரை: பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் வெள்ளி, சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மூடப்­பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் மாநி­லம் முழுவதும் 12 முக்கிய இடங்களில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

"இன்னும் 10 நாள்களுக்குள் வாரத்தின் ஏழு நாள்களிலும் கோயில்களைத் திறக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில், சிறை செல்லவும் தயங்கமாட்டோம். இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும் திறக்கவேண்டும்," என்று முழக்கமிட்டனர்.

இதைத்தொடர்ந்து, கொரோனா விதி­மு­றை­களை மீறி ஆர்ப்­பாட்­டம் நடத்­திய முன்­னாள் மத்­திய அமைச்­சர் பொன் ராதாகிருஷ்­ணன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்­ளிட்ட 900 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

கோவில்­களில் அனைத்து நாள் களி­லும் பக்­தர்­களை அனு­ம­திக்கக் கோரி மதுரை மீனாட்சி அம்­மன் கோவில் முன்பு முன்­னாள் மத்­திய அமைச்­சர் பொன் ராதா­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பு பாஜக சார்­பில் நடைபெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை பேசியபோது, "கோயிலைத் திறப்­பது தொடர்­பாக அரசு தனது முடிவை மாற்­றிக் கொள்ளாவிடில், ஆளும் அரசை நிலைகுலைய வைப்­போம். உள்­ளாட்சித் தேர்­த­லில் திமுக அமைச்­சர்­கள் பிர­சா­ரம் செய்­யும்போது வராத கொரோனா, மதுக்கடை­கள் திறப்­பின்போது வராத கொரோனா கோயிலைத் திறந்தால் மட்டும் வந்து விடுமா? உங்களது கட்டுப்பாடுகளை எங்கள் வீட்­டின் பூஜை அறைக்கு கொண்டுவரா­தீர்­கள்," என்றார்.

கொரோனா இரண்­டாம், மூன்­றாம் அலை­க­ளின் தாக்­கத்­தால் மக்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்­க­வும் ஆலயங்­களில் வாரயிறுதி நாள்களில் பொது­மக்­கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்­க­வும் கோயில்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் அன்றாட பூஜைகள் ஆலயங்களில் தடையின்றி தொடர்வ தாகவும் தமி­ழக அரசு விளக்கம் கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!