முந்திரி ஆலையில் ஊழியர் மரணம்; திமுக எம்பி மீது கொலை வழக்கு

கட­லூர்: முந்­திரி ஆலை ஊழி­யர் ஒரு­வர் அடித்தே கொல்­லப்­பட்­ட­தாக அதிர்ச்சித் தக­வல் வெளி­யாகி­யுள்­ளது. இதன் தொடர்­பில் கட­லூர் திமுக எம்பி மீது கொலை வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

திமுக எம்பி ரமேஷ் தவிர குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள 5 நபர்­களை சிபி­சி­ஐடி காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர் என்று இந்­திய எக்ஸ்­பி­ரஸ் நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

கட­லூர் மாவட்­டம் மேல்­மாம்­பட்டு கிரா­மத்­தைச் சேர்ந்த கோவிந்­த­ராஜ், பணிக்­கன்குப்­பம் கிரா­மத்­தில் செயல்­பட்டு வரும் கடலூர் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரமே­ஷுக்­குச் சொந்­த­மான டி.வி.ஆர். முந்­திரி தொழிற்­சா­லை­யில் எட்டு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாகப் பணி­யாற்றி வரு­கி­றார்.

கடந்த 19ஆம் தேதி அன்று வேலைக்குச் சென்­ற­வர் வீடு திரும்­ப­வில்லை.

இத­னால் அவ­ரின் குடும்ப உறுப்­பி­னர்­கள் பதற்­றம் அடைந்­த­னர். இந்­நி­லை­யில் ரமே­ஷின் உத­வி­யா­ளர், கோவிந்­த­ராஜ் இறந்­து­விட்­ட­தா­க­வும் அவ­ரு­டைய உடல் பண்­ருட்டி அரசு மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார். அரசு மருத்­து­வ­ம­னைக்கு விரைந்த குடும்­பத்­தி­னர், அவ­ரு­டைய உட­லைப் பார்த்து அதிர்ச்­சி­ அ­டைந்­த­னர்.

கோவிந்­த­ரா­ஜின் உடல் முழு­வ­தும் ஏற்­பட்­டி­ருந்த காயங்­களைக் கண்டு சந்­தே­கம் அடைந்த அவர்­கள் கொலை வழக்­காக பதிவு செய்ய வேண்­டும் என்­றும் இல்­லை­ யென்­றால் உடலை வாங்க முடி­யாது என்­றும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் குடும்­பத்­தி­னர் வழக்குப் பதிவு செய்­த­தால், நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி விழுப்­பு­ரம் மாவட்­டம் முண்­டி­யம்­பாக்­கம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த கோவிந்­த­ரா­ஜின் உடல் ஜிப்­மர் மருத்­து­வ­னைக்கு மாற்­றப்­பட்டு பிரே­தப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது. இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்­றப்­பட்­டது.

விசா­ரணை மேற்­கொண்ட அவர்­கள் ரமேஷ் மற்­றும் அவ­ரது தொழிற்­சா­லை­யில் உள்ள நட­ராஜ், அல்லா பிச்சை, சுந்­தர், வினோத், கந்­த­வேல் உள்­ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்­குப் பதிவு செய்­த­னர்.

இதில் ஐவரை மட்­டும் சி.பி.சி.ஐ.டி. காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

திமுக எம்.பி. நேற்று மாலை வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இந்த விவ­கா­ரம் திமு­க­வுக்கு தலை­வ­லியை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்ப தால் அவர் பதவி வில­க­லாம் என்றும் கூறப்­ப­டு­கிறது.

சம்­ப­வத்­தன்று முந்­திரி ஆலை­யில் எம்பி ரமேஷ், இருந்­தாரா என்­பது தெரி­ய­வில்லை.

இதற்கிடையே இந்த வழக்கை நேர்மையான அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!