மின்கம்பியை மிதித்த மகன் பலி; காப்பாற்ற வந்த தந்தையும் மரணம்

அரி­ய­லூர்: அரி­ய­லூ­ரில் நிகழ்ந்த பரி­தா­பச் சம்­ப­வத்­தில் மக­னும் தந்­தை­யும் மாண்­ட­னர். கீழப்­ப­ழு­வூ­ரில் உள்ள காட்­டுப்­ப­கு­தி­யில் வசித்து வந்த முத்­து­சாமி, 47, குடும்­பத்­து­டன் வீட்டைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் விவ­சா­யம் செய்து வந்­தார்.

இந்­நி­லை­யில் மளிகை கடை­யில் வேலை பார்க்­கும் இவ­ரது மகன் சங்­கர், 19, வேலை முடிந்து சைக்­கி­ளில் வீடு திரும்­பிக்கொண்­டி­ருந்­தார்.

அப்­போது பலத்த காற்­று­டன் மழை பெய்­த­தால் வீட்­டின் அருகே இருந்த முருங்கை மரம் முறிந்து மின் கம்­பி­யின் மீது விழுந்­த­தால் மின்­கம்பி அறுந்து விழுந்­தது. இதைக் கவ­னிக்­காத சங்­கர் மின் கம்­பியை மிதித்­த­தால் அவர் மீது மின்­சா­ரம் பாய்ந்­தது.

அவர் துடி­து­டித்து, அலறி சத்­தம் போட்­டார். இதை­ய­டுத்து சத்­தம் கேட்டு வெளியே வந்த தந்தை முத்­து­சாமி, குச்­சி­யால் மின் கம்பியைத் தட்­டி­யுள்­ளார்.

ஆனால் குச்சி ஈர­மாக இருந்த­தால் அவர் மீதும் மின்­சா­ரம் பாய்ந்­தது.

இதில் தந்தை உயி­ரி­ழந்­தார். அவ­ரது மக­னும் மாண்­டார். இந்­தச் சம்­ப­வம் குறித்து கீழப்­ப­ழு­வூர் போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!