தடுப்பூசி போடாத 87% பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களில் 87% பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு 88,719 பேர் ஆளாகினர். அவர்களில் 63% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். 24% பேர் ஒரு முறை மட்டும் தடுப்பூசியையும் 13% பேர் முழுமையாக இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

கிருமிப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,816. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,626. இவர்களில் 87% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை பொது சுகா­தா­ரத்­துறை இயக்­கு­நர் டாக்­டர் செல்­வ­வி­நா­ய­கமும் அவரது காணொளிப் பதவில் உறுதிப்படுத்தி இருந்தார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!