சைக்கிள், கைபேசி, பட்டாசு இலவச அறிவிப்புகளால் அதிக ஆர்வம் காட்டிய மக்கள் தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முைறயில் பரிசு

சென்னை: தமி­ழ­கத்­தில் ஐந்­தாம் கட்­ட­ மாபெ­ரும் கொவிட்-19 தடுப்­பூசி முகாம் நேற்று நடை­பெற்­றது.

முதல் தவணை தடுப்­பூ­சியைப் போட்டுக்கொள்பவர்­க­ளுக்கு குலுக்­கல் முறை­யில் துணி துவைக்­கும் இயந்­தி­ரம், 'மிக்ஸி', 'பிர­ஷர் குக்­கர்', 'ஆண்ட்­ராய்டு' கைபேசிகள் உள்­ளிட்ட பரி­சு­களை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இதனால், தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள ஏரா­ள­மான மக்­கள் தடுப்பூசி முகாம்­களில் குவிந்­த­னர்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­க­வும் அன்­றாட கிரு­மிப் பாதிப்­பில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்­க­வும் கடந்த ஐந்து வாரங்­க­ளாக ஞாயி­று­தோ­றும் மாபெ­ரும் தடுப்­பூசி முகாம்­களை நடத்­தும் பணியை அரசு முடுக்கிவிட்­டிருந்தது.

மாநி­லத்­தில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் போதிய அள­வில் தடுப்­பூசி இருப்பு உள்­ள­தால், மக்­கள் தயக்­க­மின்றி தடுப்­பூசி போட்­டுக்கொண்டு தங்­கள் உயி­ரைப் பாதுகாத்­துக்­கொள்ள வேண்­டும் என்று சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­களும் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

இந்நிலையில், ஏறக்­கு­றைய 30,000 முகாம்­களில் 33 லட்­சம் பேருக்கு நேற்றிரவு 7 மணி­வரை தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.

பொது­மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்கொள்­வதை ஊக்­கு­விக்­கும் வகையில் பல்­வேறு சலு­கை­கள், பரிசுகளையும் வழங்க உள்ளதாக மாவட்ட, கிராம நிர்­வா­கங்­கள் அறி­வித்து இருந்தன.

மது­ரை­யில் நேற்றைய தடுப்பூசி முகாம்­களில் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ப­வர்­க­ளுக்கு குலுக்­கல் முறை­யில் துணி துவைக்­கும் இயந்­தி­ரம், கைபே­சி­கள், குக்­கர், சேலை­கள், வேட்டி, துண்­டு­கள் வழங்­கப்­படும் என மதுரை மாந­க­ராட்சி ஆணை­யர் கா.ப. கார்த்­தி­கே­யன்­அறி­வித்திருந்தார்.

"நிறையப் பேருக்கு இன்னும் பயம் உள்­ள­தால் தடுப்பூசி போடத் தயங்கு­கின்றனர். தடுப்­பூசி போட்­டுக்கொள்ளும் மூவருக்கு 32 அங்குல வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பரி­சாக வழங்­கப்­படும்,'' என திருப்­பத்­தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்­வாஹா கூறி­னார்.

"ஈரோடு, பவானி தாலுகாவில் தடுப்பூசி போடுபவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து முதல் பரிசாக ஐவருக்கு ரூ.1,000 மதிப்புள்ள பட்டாசுப் பெட்டிகளும் இரண்டாம் பரிசாக 100 பேருக்கு பெரிய அளவிலான குடைகளையும் வழங்க உள்ளோம்," என பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!