நீதிபதி: பேரனோடு சேர்ந்து தமிழ் கற்கப்போகிறேன்

சென்னை: பழ­மை­யான கலா சாரத்­தைக் கொண்ட தமிழ்­நாட்­டில் ஒரு நீதி­ப­தி­யா­கப் பொறுப்­பேற்­றுக்கொள்­வது தனக்கு மிகுந்த மகிழ்ச்­சியை அளிப்­ப­தா­கக் கூறி­யுள்ள பரேஷ் ரவி­சங்­கர் உபாத்­யாய், ஒரு தமிழ் ஆசி­ரி­யரை நிய­மித்து தன் பேர­னு­டன் சேர்ந்து தானும் தமிழ் கற்­றுக் கொள்­ளப்போவ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

அதி­பர் ராம்­நாத் கோவிந்த், உச்ச நீதி­மன்ற நீதி­பதி என்வி.ரமணா ஆகி­யோ­ரின் உத்­த­ர­வுப்­படி குஜ­ராத் உயர் நீதி­மன்ற நீதி­பதியாக இருந்து வந்த பரேஷ் ரவி சங்­கர் உபாத்­யாய், சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் புதிய நீதி பதி­யாக நிய­ம­னம் செய்­யப்பட்­டுள்­ளார்.

அவ­ருக்கு உயர் நீதி­மன்ற மூத்த நீதி­பதி டி.எஸ்.சிவ­ஞா­னம் பத­விப் பிர­மா­ணம் செய்து வைத்­தார். இந்த நிகழ்­வுக்­குப் பிறகு நீதி­பதி ரவி­சங்­கர் உபாத்­யாய் பேசி­ய­போது, ''பாரம்­ப­ரி­ய­மிக்க சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி­யாக பதவியேற்­றது குறித்து பெரு­மைப்­ப­டு­கி­றேன். என் மீதுள்ள எதிர்­பார்ப்பு­களைப் பூர்த்தி செய்­வேன். தற்­போது தமி­ழ­கத்­தின் குடி­ம­க­னாக ஆகி­யுள்­ள நான், எனது பேரனோடு சேர்ந்து தமிழ் கற்கப்போகிறேன்," என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

''கடந்த 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நீதி­ப­தி­யாக நான் பதவி வகித்­தா­லும் இன்­றும் மன­த­ள­வில் ஒரு வழக்­க­றி­ஞ­ரா­கத்­தான் உள்­ளேன்.

''வழக்­க­றி­ஞர்­கள் முன்னிலை ஆகவில்லை என்­ப­தற்­காக இது­வரை ஒரு வழக்­கைக்­கூட நான் தள்ளுபடி செய்­தது கிடையாது. ஆனால் அதை வழக்­க­றி­ஞர்­கள் தங்­க­ளுக்கு சாத­க­மாக எடுத்­துக் கொள்­ளக்கூடாது,'' என்­றார்.

சென்னை உயர் நீதி­மன்­றத்­துக்கு மேலும் 10 புதிய நீதி­ப­தி­களை நிய­மிக்க மத்­திய அர­சுக்கு உச்­ச­ நீ­தி­மன்ற நீதிபதிகள் பரிந்­து­ரை­ செய்­துள்­ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!