கொலை வழக்குப் பதிவு: திமுக எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: முந்­திரி தொழிற்­சா­லை­யில் பணி­யாற்றி வந்த ஊழி­ய­ரின் மர்ம மர­ணம் தொடர்­பான வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள திமு­க­வின் கட­லூர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரமேஷ் நேற்று முன்­தி­னம் நீதி­மன்­றத்­தில் சர­ண­டைந்­தார்.

இதை­ய­டுத்து வெளியிட்ட அறிக்கை ஒன்­றில், தம் மீதான புகார் ஆதா­ர­மற்­றது என்­பதை சட்­டத்­தின் முன் தகுந்த ஆதா­ரங்­க­ளு­டன் நிரூ­பிக்­கப் போவ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பண்­ருட்­டிக்கு அருகே ரமே­ஷுக்குச் சொந்­த­மான முந்­திரி தொழிற்­சாலை உள்­ளது. அதில் வேலை பார்த்து வந்த 55 வயதான கோவிந்­த­ராசு என்­ப­வர் கடந்த செப்­டம்­பர் 19ஆம் தேதி மர்­ம­மான முறை­யில் உயி­ரி­ழந்­தார்.

இந்­நி­லை­யில், அவ­ரது மர­ணத்­துக்கு ரமேஷ் எம்­பி­தான் கார­ணம் எனக் குற்­றம்­சாட்­டிய அவ­ரது உறவி­னர்­கள் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து இந்த வழக்கு சிபி­சி­ஐடி பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டது. அதன்பின்­னர் ரமேஷ் எம்பி உள்­ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்­குப் பதி­வா­னது. இவர்­களில் ஐந்து பேர் கைதான நிலை­யில், ரமேஷ் பண்­ருட்டி சார்பு நீதி­மன்­றத்­தில் சரண் அடைந்­துள்­ளார்.

தன் மீதான ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து சில அர­சி­யல் கட்­சி­கள் காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­டன் தவ­றான பிர­சா­ரத்தை மேற்­கொண்­டுள்­ள­தாக தமது அறிக்­கை­யில் ரமேஷ் எம்பி குறிப்­பிட்­டுள்­ளார்.

திமுக ஆட்சி மீது வீண்­ பழி சுமத்துபவர்­க­ளுக்கு மேலும் இடம் கொடுத்­திட வேண்­டாம் எனக் கருதி தாம் நீதி­மன்­றத்­தில் சர­ண­டை­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

அதன்­படி நேரில் சர­ண­டைந்த அவரை இரண்டு நாள் நீதி­மன்றக் காவ­லில் வைக்கும்படி பண்­ருட்டி சார்பு நீதி­மன்ற நீதி­பதி உத்­த­ரவு பிறப்­பித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!