1 டிரில்லியன் டாலர் பொருளியல் இலக்கை எட்டும் திறன் அரசுக்கு உள்ளது: நிபுணர்கள் நம்பிக்கை

சென்னை: எதிர்­வ­ரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் தமி­ழ­கத்­தின் பொரு­ளி­யல் மதிப்பை ஒரு லட்­சம் கோடி அமெ­ரிக்க டால­ராக உயர்த்தவேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் இலக்கு நிர்­ண­யித்­துள்­ளார்.

இந்த இலக்கை அடை­வது வெறும் கனவு மட்­டு­மல்ல, அதை அடை­யக்­கூ­டிய திறன் தமி­ழக அர­சுக்கு உள்­ளது என தமி­ழக அர­சின் தொழில்­துறை செய­லா­ளர் முரு­கானந்­தன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் அண்­மை­யில் பல்­வேறு துறை சார்ந்த நிபு­ணர்­கள் பங்­கேற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய அவர், பல்­வேறு நிபு­ணர்­கள் அடங்­கிய குழு­வா­னது இலக்கை அடை­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தின் பொரு­ளி­ய­லுக்கு சேவைத்­து­றை­யின் பங்­க­ளிப்பு 55 விழுக்­கா­டா­க­வும் உற்­பத்­தித் துறை­யின் பங்­க­ளிப்பு 30 விழுக்­கா­டா­க­வும் உள்­ளதாகக் குறிப்­பிட்ட முரு­கா­னந்­தன், விவ­சா­யத்­துறை 15 விழுக்­காடு பங்­க­ளிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"தமி­ழக அரசு உற்­பத்தி, விவ­சா­யத்­து­றை­யு­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட வேண்­டும். நாட்­டி­லேயே மிகச் சி­றந்­த ஒன்றாகப் பெய­ரெ­டுத்­துள்ள சென்னை துறை­மு­கத்­தின் மூலம் ஏற்­று­மதி செய்­வ­தில் கவ­னம் செலுத்­தி­னால் நிர்­ண­யித்த இலக்கை எட்­டு­வது உறுதி செய்­யப்­படும்.

"ஒவ்­வோர் ஆண்­டும் சுமார் இரு­பது விழுக்­காடு வளர்ச்­சி­யைப் பதிவு செய்­தால் ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­யல் இலக்கை நிச்­ச­யம் அடை­ய­லாம்," என்று முரு­கா­னந்­தன் கூறி­னார்.

மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் நாட்­டில் இரண்­டா­வது இடத்­தில் தமி­ழ­கம் உள்­ளது என்று சுட்­டிக்­காட்­டிய அவர், நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை எட்­டு­வது சாத்­தி­யம் என்ற நம்­பிக்­கை­யு­டன் செயல்­பட வேண்­டும் என்­றார்.

இந்­நிகழ்வில் பேசிய பல நிபுணர்களும் தமி­ழக அரசு தனது பொரு­ளா­தார இலக்கை அடை­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை முன்­வைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!