விருதுநகர்: ஒன்பது மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி திமுக அதிகமான இடங்களில் முன்னிலையில் இருப்ப தாகத் தகவல்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப் பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்களிப்பில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இந்த ஒன்பது மாவட்டங்களுடன் ஏனைய 28 மாவட்டங்களில் 789 காலி இடங்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடந்தது.
தேர்தல் முடிவை அறிவிக்கும் சமயத்தில் பல இடங்களிலும் மோதல்கள் நடப்பதற்கு வாய்ப்பிருந்ததால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாக்குச்சீட்டு முறை என்பதால் ஏராளமான குழப்பங்கள் இருக்கலாம் என்றும் இதன் காரணமாக முடிவுகளை அறிவிக்க நள்ளிரவு வரை ஆகலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே திமுகவே முன்னிலையில் இருந்து வருகிறது.
திமுக அனைத்து பதவிகளிலும் இரு இலக்க எண்களில் முன்னிலை வகித்துவர, அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் முன்னிலையில் இருந்தன.
மாலை 5 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 138 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 93 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முன்னிலையில் இருந்தன.
அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நான்கு இடங்களிலும் பாமக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்தன.
மொத்தமுள்ள 1,375 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 194 இடங்களில் திமுக முன்னிலை வகித்த நிலையில், 33 இடங்களில் அதிமுகவும் ஆறு இடங்களில் பாமகவும் முன்னிலையில் இருந்தன.
இதற்கிடையே, கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கின் வீட்டில் ஐந்து வாக்குகள் இருந்தும் அவ ருக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத் திருந்தததால் அவர் அதிர்ந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சாவி மாயமானதால், தேர்தல் அதிகாரியின் முன்னி லையில் வாக்குப் பெட்டி உடைக்கப் பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.