குழந்தைகளுக்கான உணவைப் பரிசோதித்த அதிகாரிகள்

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள பால்­வாடி மையங்­களில் குழந்­தை­­களுக்கு வழங்கப்­படும் உண­வுப் பொருள்­களைத் தமி­ழக அர­சின் உணவுப் பாது­காப்­புத்­ துறை அதி­கா­ரி­கள் திடீர் ஆய்வு செய்தனர்.

சென்னை சிந்­தா­தி­ரிப்­பேட்டை, பெரி­ய­மேடு, எழும்­பூர் பகு­தி­களில் இந்தச் சோதனை தொடர்ந்தது.

குழந்­தை­க­ளுக்கு வழங்­கப்­படும் சத்­து­மாவு, குடி­நீர் உள்­ளிட்­டவை தர­மாக, சுத்­த­மாக உள்­ளனவா? குறிப்­பிட்ட காலக்­கெ­டு­வுக்­குள் கெட்டுப்போகாமல் பயன்­ப­டுத்­தப்­படு­கி­ன்றனவா? என சோதித்தனர்.

அங்­கன்­வாடி மையங்­க­ளின் சமை­ய­ல­றைக்­குச் சென்ற அதி­கா­ரி­கள், பாத்­தி­ரங்­கள் சுத்­த­மாக உள்ளனவா? என சோதித்­த­துடன், அங்கு தயா­ராகி இருந்த முட்டை, கீரை உள்­ளிட்ட உணவு­க­ளை­யும் சுவைத்துப் பார்த்து ஆராய்ந்­த­னர்.

''அர­சின் உத்­த­ர­வுப்­படி குழந்­தை­கள் நல­னைக் கருத்­தில்கொண்டு இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது," என்­று அதி­கா­ரி­கள் கூறினர்.

அங்­கன்­வாடி என்­பது இந்­திய அர­சால் நடத்­தப்­படும் தாய்-சேய் நல மையமாகும். தமி­ழ­கத்­தில் 54,439 அங்­கன்­வாடி மையங்­கள் செயல்­படுகின்றன. இவை பால்­வாடி என்ற பெய­ரில் அழைக்­கப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!