ஜெயலலிதா சமாதியில் சசிகலா கண்ணீர் அஞ்சலி

சென்னை: சென்னை மெரினா கடற்­க­ரை­யில் அமைந்­துள்ள தனது ஆரு­யிர் தோழி ஜெய­ல­லி­தா­வின் நினை­வி­டத்­துக்­குச் சென்று மலர்­களை வைத்து கரம்­கூப்பி மரி­யாதை செய்து, கண்­ணீர்­மல்க சசி­கலா அஞ்­சலி செலுத்­தி­னார்.

தொடர்ந்து எம்­ஜி­ஆர், அண்ணா சமா­தி­க­ளுக்­கும் சென்று அவர் மாலை அணி­வித்­தார்.

அங்­கி­ருந்த ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் பேசிய சசி­கலா, "அதி­மு­கவை எம்­ஜி­ஆ­ரும் ஜெய­ல­லி­தா­வும் காப்­பாற்­று­வார்­கள். கட்­சிக்கு நல்ல எதிர்­கா­லம் உள்­ளது," என்று சொன்­னார்.

இத­னைத்­தொ­டர்ந்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சசி­கலா, "கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக என் மன­தில் தேக்கி வைத்­தி­ருந்த பாரத்தை இப்­போ­து­தான் ஜெய­ல­லிதா நினை­வி­டத்­தில் இறக்கி வைத்­துள்­ளேன்.

"கழ­கத்தை அம்மா காப்­பாற்­று­வார் என்ற நம்­பிக்­கை­யோடு இங்­கி­ருந்து செல்­கி­றேன். என் வய­தில் முக்­கால் பகுதி காலத்தை அம்­மா­வு­டன் நான் வாழ்ந்­துள்­ளேன்.

"தலை­வ­ரும் அம்­மா­வும் தொண்­டர்­க­ளுக்­கா­கவே, தமி­ழக மக்­க­ளுக்­கா­கவே வாழ்ந்­த­வர்­கள். அவர்­கள் அதி­மு­கவைக் காப்­பாற்றுவார் ­கள்," என்று கூறினார்.

ஏறத்­தாழ நான்கு ஆண்­டு­கள் ஏழு மாதங்­க­ளுக்­குப் பிறகு ஜெய ­ல­லிதா நினை­வி­டத்­துக்கு வந்­தி­ருந்த வி.கே.சசி­க­லாவை வர­வேற்க அவரது ஆத­ர­வா­ளர்­கள் மெரி­னா­வில் குவிந்­தி­ருந்­தனர்.

மக்­கள் கூட்­டத்­தைக் கட்­டுப் படுத்த காவல்­து­றை­யி­ன­ரும் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இதற்­கி­டையே, இன்று அதி­முக வின் பொன்­விழா ஆண்டை மிகச் சிறப்­பா­கக் கொண்­டாட உள்­ள­தாக அதி­மு­க­வின் இரட்­டைத் தலைமை அறி­வித்துள்­ளது.

மறைந்த முன்­னாள் முதல்­வர் எம்­ஜி­ஆ­ரால் உரு­வாக்­கப்­பட்ட அதி­முக, 49 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இன்று 17ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று 50வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைக்­கிறது.

இந்­நாளை பொன்­வி­ழா­வா­கக் கொண்­டா­டும் வகை­யில் பிரம்­மாண்ட மாநாடு நடத்­தப்­பட உள்ளதால், மெரினா கடற்­க­ரை­யில் 3,000 போலி­சார் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­னர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இப்போது தான் இறக்கி வைத்துள்ளேன்.வி.கே. சசிகலா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!